பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கால் பந்தாட்டம்


நேர அளவு சமமாகப் பிரிக்கப்பட்டுத் தரப்படும். இதற்கென்று இடைவேளை நேரம் கிடையாது. இரு குழுக்களும் தங்கள் ஆடுகளப் பகுதிகளை உடனே மாற்றிக் கொண்டுதான் ஆட வேண்டும்.

இவ்வாறு, இனிதாக ஆடப்படுகின்ற ஆட்டம், சொல்வதற்குச் சுவையாக இருப்பது போலவே, பார்ப்பதற்கும் பரவசமாக இருக்கும். இந்த ஆட்டத்தை ஆடும் பொழுதும் சரி. பார்க்கும் பொழுதும் சரி, பலவிதமான சொற்களை நாம் அங்கே பேசக் கேட்கிறோம். அக்கலைச் சொற்களால் தான் கால் பந்தாட்டம் விவரிக்கப்படுகிறது என்பதால், அவை களுக்குரிய விளக்கமும் விவரமும் நன்கு தெரிந்திருந்தால், ஆட்டத்தை இன்னும் கண்டு களிக்கவும், ஆடி அனுபவிக்கவும் அருமையாக இருக்கும். எனவே, இனிவரும் பகுதிகளில் விளையாட்டினைப் பற்றிய முக்கிய குறிப்புகளை தொடர்ந்து விவரிப்போம்.

5. நிலை உதை (Kick-Off)

ஆட்டத் தொடக்கத்தில், அனைவரும் நின்று கொண்டிருக்க வேண்டிய நிலையை முன் பகுதியில் கூறியிருந்தோம். அந்தந்தக் குழுவைச் சார்ந்தவர்கள், அவரவர்கள் ஆடுகின்ற இடத்திற்கேற்ப நின்று கொண்டிருக்க, வட்டத்திற்குள்ளே மைய முன்னாட்டக்காரரும், இன்னொருவரும் நின்று, பந்தை உதைத் தாடுவதன் மூலம் ஆட்டத்தைத் தொடங்கி வைக்கின்றதையே 'நிலை உதை’ என்பர்.

பந்து நடுவில் நிலையாக வைக்கப்பட்டிருக்கும். அத்தனை ஆட்டக்காரர்களையும் கண்டு, ஆட அனுமதிக்கும் வகையில் நடுவரின் விசில் ஒலி கிளம்ப,