பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 103 வானோர் புகழ்விரிஞ்சை மார்க்க சகாயரே ஏனோ தலையிறைஞ்சி னிர். (159) “எனை ஆண்டுகொண்ட பெருமானே! தேவர்களும் வந்து போற்றும் திருவிரிஞ்சை நகரிலே கோயில் கொண்டிருக்கும் மார்க்க சகாயனே! உமக்கு வேண்டிய சைவரான சுந்தரர் அனுப்பிவைத்த தூதுக்காகவோ? அன்றி முன்காலத்திலே பாண்டியனின் கைப்பிரம்பினால் அடிப்பட்டதற்காகவோ? அன்றி வேறு எதனாலோ, நீர் இப்படித் தலை கவிழ்ந்து இருக்கின்றீர்!" யாரோ இவர்? திருவீரட்டானத்திலே கோயில்கொண்டிருக்கிற சிவ பெருமானைப் பணிந்து போற்றி நிற்கும் காளமேகப் புலவருக்கு, பெருமானின்ஆற்றல்கள் அனைத்தும் நினைவில் எழுகின்றன, அவற்றை இவ்வாறு பாடுகின்றனர். இவரோவி ரட்ட ரெனுநாம முள்ளோர் இவரோ வழுவூரி லிசர்-இவரோ கடத்தடக்க தத்துறப்பி டித்திழுத்து தழுத்தி அடித்தறுத்து ரித்துடுத்த வர். (160) வீரட்டானர் என்ற திருப்பெயரினை உடையவரும் இவர்தானோ? இவர் தானோ திருவழுவூரிலே கோயில் கொண்டிருக்கும் ஈசரும்? மும்மதங்களை உடையதும், மிக்க சினமுடையதுமான யானையினைப் பற்றிப் பிடித்து இழுத்து அழுத்தி, அடித்துக்கொன்று, அதனை அறுத்து, அதன் தோலையுரித்து உடுத்த ஆற்றலுடையவரும் இவர் தானோ?” நஞ்சு தின்றதென்? தேவர்களும் அசுரர்களும் ஒன்றுகூடிப் பாற்கடலைக் கடைந்தனர். அந்த நாளிலே எளுந்த நஞ்சினைச் சிவ பெருமான் உண்டு அவர்களைக் காத்தனர். அதனைக் குறிப்பிட்டு, 'அவர் தன் உயிரை விட்டுவிடுவதற்குக் கருதிப் போலும் அங்ங்ணம் நஞ்சினை அருந்தினர்? என்று பாடுகின்றார் கவிஞர் காளமேகம். கல்லால் அடித்ததற்கோ காலால் உதைத்ததற்கோ வில்லா லடித்ததற்கோ வெட்கினி-சொல்வீரால் மஞ்சுதனைச் சூடுமுயர் மதிலானைக் காவாரே நஞ்சுதனைத் தின்றறென்முன் னாள். (161) "சாக்கியன் உம்மைக் கல்லால் அடித்தானே அதற்காகவோ? கண்ணப்பன் உம்மைக் காலால் உதைத்தானே அதற்காகவோ? அருச்சுனன் உம்மை வில்லால் அடித்தானே அதற்காகவோ? எதற்காகவோ நீர் வெட்கமுற்றீர்? மேகங்கள் தன்னைச் சூழ்ந்திருக்க விளங்கும் உயரமான திருமதிலினை உடைய திருவானைக்காவிலே