பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

141



சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுத்து வணக்கம் செலுத்தியபோது இலங்கை அரசன் கயவாகு வந்திருந்ததே தமிழகத்தின் பண்பாட்டுத் தொடர்புக்கு எடுத்துக்காட்டு.

தமிழ் மக்கள் உலகந்தழீஇய ஒட்பம் உடையவர்களாக விளங்கினர், ஒழுக்கத்திற்கு ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்று இலக்கணம் வகுத்தது தமிழ். உலக நிலப்பரப்பில் எந்த நாடாக இருந்தாலென்ன? எந்த ஊராக இருந்தாலென்ன? அந்த நாடுகளையும் ஊர்களையும் அங்குக் குடியேறி வாழ்பவர்கள் தமது நாடுகளாக, தாம் பிறந்து வளர்ந்த ஊர்களாக ஆக்கிக் கொள்ளுதல் கல்வியின் விழுமிய பயன் - அறிவின் ஆக்கம் என்கிறது தமிழ் மறை.

“யாதானும் நாடாமால் ஊராமால் என்றொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு”

-குறள் 397

என்பது திருக்குறள்.

ஒரு நாட்டு மக்களுக்குப் பன்னாட்டுத் தொடர்பு இருக்குமானால் அந்நாட்டு மக்கள் விசாலப் பார்வை பெறுவர். எல்லைகளைக் கடந்து அவர்களுடைய வாழ்வியல் பண்பு வளரும்; விரிவடையும், நயத்தக்க நாகரிகத்தில் வளர்வர். ஒரு நாட்டு மக்கள் பன்னாட்டு மக்களுடன் தொடர்பு கொள்ளும்பொழுது, அறிவியல் வளரும். தொழில் நுட்பம் வளரும். கருத்துக்கள் பரிமாற்றத்தால் பல ஆண்டுகள் வளர்ச்சியைச் சில ஆண்டுகளில் எளிதில் பெறமுடியும்.

இனி எதிர்வரும் காலத்தில் உலக நாடுகள் நெருக்கமான நட்புறவை வளர்த்துக்கொண்டு, “ஓருலகம்” காணும் என்னும் நம்பிக்கை வளர்ந்துவருகிறது. ஆதலால், பன்னாட்டுத் தொடர்பை வளர்த்துக்கொள்ளும் வகையில் மாணவர்கள் பலநாட்டு இலக்கியங்களைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கற்கும் காலத்திலேயே