பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

199


யாற்றும், நமது காமராசர் அவர்கள், வகுப்புவாதக் கொள்கையினரோடு கூட்டுறவு வைத்திருப்பதாக, பெரியார் அவர்களையும், காமராசரையும் பிணைத்து “செய்திச் சித்திரம்” ஒன்று தீட்டியிருந்தது. (வகுப்புவாதக் கொள்கை, சிறு சிறு அளவில் “சாதிகள்” அளவோடு நிற்பது; வெறுப்புணர்ச்சியை வளர்ப்பது. ஆனால், இன நலக் கொள்கை, விரிந்த பரந்த நோக்கத்தோடு, ஓர் இனத்தின் மொழி, கலை, அடிப்படை உரிமைகள் ஆகியவைகளைப் பேணிக்காப்பதற்காக உருவானது) சுதந்திர பாரத நாடு மிகப்பெரிய நாடு. இந் நாட்டில் பல்வேறு தேசீய இனங்கள் வாழ்கின்றன. பல்வேறு தேசீய இனங்களின் நலன்களைப் பாதுகாப்பதாக அரசியல் சட்டம் உறுதிமொழி அளித்துள்ளது. அத்தகைய இனநலத்தைக் காப்பதே பெரியார் அவர்களின் அடிப்படைக் கொள்கை

இனவெறி வெறுப்பாளர்

இனநலக் கொள்கையின் அடிப்படையில் வேலை செய்யும்பொழுது, இனவெறி வராமல் இருக்கவேண்டும்; வரவும்- கூடாது. “இனவெறி”க் கொள்கை, பரந்துபட்ட தேசீயப் பண்பாட்டுக்கும் உகந்ததல்ல. அதுமட்டுமின்றி, இனவெறிக் கொள்கையின் மூலம், நாட்டின் ஒற்றுமை குறையும். இனவெறிக் கொள்கையை நாம் மறுக்க முடியுமே தவிர, இனநலக் கொள்கையை விரும்பாமல் இருக்க முடியாது. பெரியார் அவர்களை இனநலக் கொள்கை பேணும் ஒரு தலைவராகவன்றி, இனவெறிக் கொள்கையை யுடையவராக நாம் கருதவில்லை. ஆனாலும், இனநலக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவரும்பொழுது, இனவெறிக் கொள்கை அரும்புவதற்கும் வாய்ப்புக்கள் உண்டு என்பதை மறுக்கமுடியாது. ஆனால், அவ்வாய்ப்புக்கள் தவிர்க்கப்படக் கூடியவைகளே என்று நாம் கருதுகிறோம்.