பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

299


கதவடைப்பு; அதன் வாயிலாக உற்பத்தி முடக்கம்! இது இந்த நாட்டின் அன்றாடச் செய்தியாகி வருகிறது. இந்த அளவுக்கு உழைப்பில் அக்கறையில்லாது நாடு திசைமாறிச் செல்லும் சூழ்நிலையில் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் நாட்டுப்பற்றை, உற்பத்தி ஆர்வத்தைக் காட்டியுள்ளார்கள். அவர்களுக்கும் குறைகள் உண்டு. அவற்றை எடுத்துச் சொன்னார்கள். வழக்கம் போல நிர்வாகம் காதில் போட்டுக கொள்ளவில்லை. வேறு வழியில்லை. நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் போராடத் திட்டமிட்டனர். ஆனால் அவர்கள் வகுத்த போராட்ட முறை நாட்டுப் பற்றுக்கு – நாட்டின் வளத்துக்கு அரண் செய்வதாக அமைந்தது. ஆம்! வழக்கமாகச் செய்யும் வேலையிலும் கூடுதலாக வேலை செய்வதும், மேலும் அதிக நேரம் வேலை செய்வதும் என்று முடிவெடுத்தனர். இந்த முறை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது!

இன்று நமது நாட்டில் உழைப்பாற்றல் உரியவாறு பயன்படுத்தப் பெறவில்லை என்பது நாடறிந்த உண்மை. ஒவ்வொருவரும் தமது ஆற்றலில் 17% தான் உழைப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. நாடு விடுதலை பெற்றபோது அரசின் நிர்வாக இயந்திரத்தில் பணி செய்தவர்களைவிட 2 மடங்கு கூடுதலாக இப்போது அலுவலர்கள், பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். ஆயினும் நாடு பணியாளர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி வளரவில்லை! எங்கும் தேக்கம்! பல்வேறு அலுவலர்கள் அலுவல்களைப் பகுதி நேரப் பணிபோலத்தான் செய்கின்றனர். கோப்புகள் நகர்கின்றன – அல்லது ஊர்ந்து சுற்றுகின்றன. நான்கைந்து தாள்களில் முடிய வேண்டிய கோப்புகள் சுற்றிச் சுற்றி வந்து கோப்புக் கணக்கிறது. கோப்பு கனத்தால் பரவாயில்லை. பெண்ணின் வயிறு பெரிதானாலும் பிரசவமானாலும் குழந்தை கிடைக்கும் என்பது போலக் கோப்பு கனத்தாலும் நல்வாழ்வு கிடைக்கும் என்று நம்பலாம். ஆனால் இது கருக்