பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

335


யடைந்துவிட்டன. ஆனால், நேரு காலத்தில் நடுவண் அரசால் எஸ்.கே. டே. அவர்களால் தோற்றுவிக்கப் பெற்ற சமூக நலத்திட்டம், ஓரளவு பரவலாக வளர்ந்தது! கால் கொண்டது. ஆயினும் காலப்போக்கில் கிராம நலம் என்ற திசையிலிருந்து வேறு திசைக்குப் போய் இப்போது “ஒரு அலுவலக" வடிவத்தில் உயிர்ப்பின்றி இயக்கமற்றுள்ளது. ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுக்கும் பொழுதும் - கிராமப்புற மேம்பாட்டுக்குத் தனிக் கவனம் செலுத்தப்பட்டது என்பது உண்மைதான். ஆனால், நடைமுறைகளின் கோளாறு காரணமாக எதிர்விளைவுகளைக் கண்டதே உண்மை. ஆதலால் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்கிற அறிஞர் பெருமக்கள் கண்ணோட்டமின்றி வரலாற்றுப் போக்கில் உண்மைகளைக் கண்டு அதன் குறை நிறைகளை எடுத்துக்காட்டி நமது நாட்டின் கிராமப்புற வளர்ச்சிக்குச் சரியான - கண்டிப்பான நடைமுறைச் சாத்தியமான பரிந்துரைகளை மக்கட் சமுதாயத்திற்கும் அரசுகளுக்கும் பரிந்துரை செய்ய வேண்டும் என்பது நமது விருப்பம்; வேண்டுகோள்!

சமூகம்

பல்வேறு மக்களிடையே வேறுபாடற்ற ஒருமை நலத்துடன் கூடிய உளஞ்சார்நத் பழகும் பாங்கையே "Social" என்ற சொல் உணர்த்துவதாக நாம் கருதுகின்றோம். இத்தகு உளநலம் - பழகும் பாங்கு. நாட்டில்வாழ் மக்களிடையில் நிலவச் சமசீரான் பொருளாதார வாய்ப்புகள் தேவை. அருவருப்புத் தன்மையுடைய போட்டிகளும் சுரண்டும் தன்மையுடைய பொருளியல் சார்பும், மக்களின் நலத்திற்குத் தீங்கு செய்வன. இன்று இந்தியா அருவருப்பு நிறைந்த போட்டிகள் மிகுந்த நாடாக விளங்குகின்றது. "சுரண்டல் பொருளாதாரம்?" ஏகபோகமாகக் கொழுத்து வளர்கிறது. ஏன்? இந்த இரண்டு தீமைகளையும் அரசுகள் அங்கீகரித்துச்