பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

442

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆனால், கூர்ந்து நோக்கினால் உண்மை புலப்படும். இதனை மாமுனிவர் மார்க்ஸ் இயக்க இயல் பொருள் முதல்வாதம் என்றார். திருவள்ளுவரும் “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்றார்.

பொருள் என்பது பணம் மட்டும் அல்ல. இன்று பணமேலாதிக்கம் உள்ள சமுதாய அமைப்பு இருப்பதால் எல்லாம் பணமாகக் கருதப்படுகின்றது. உண்மையில் சொல்லப்போனால் மனித வாழ்வுக்குப் பயன்படக்கூடிய அனைத்தும் பொருள்களே! திருக்குறள் மக்களைக் கூடப் ‘பொருள்’ என்று குறிப்பிடுகிறது. “தம் பொருள் என்ப தம் மக்கள்” என்பது திருக்குறள், ஆம்! மானுட வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய பொருளை உற்பத்தி செய்யும் மக்களைப் பொருள் என்று கூறுவது சரியே! காலப்போக்கில் பொருள் என்ற சொல் – பண்டமாற்றுக்குப் பதில் நாணயமாற்று முறை அறிமுகப்படுத்தப்பட்டதின் விளைவாக – உடமையைக் குறிப்பதாக மாறிவிட்டது. பொருள்கள் உடைமைகளானவுடன் உடைமைப் பற்று வளர்ந்து வந்துள்ளது. இன்று குடும்பச் சூழலிலிருந்து சமூகம் – நாடு வளர உடைமைப் பற்றே உள்நுழைந்து மனித நேயத்தினையும் உறவுகளையும் உள்ளிடழிந்து வருகின்றது.

உழைப்பும் – அறநெறியும் சாராத உடைமைப் பற்றின் விளைவாகச் சமூகத் தீமைகளாகிய அழுக்காறு, அவா, வெகுளி முதலிய ஒழுக்கக்கேடுகள் நாட்டை அலைக்கழித்து வருகின்றன. இதன் விளைவாக மனித குலத்தின் பீடழிந்து வருகிறது. அதே போழ்து மனித குலத்தை ஆட்டிப் படைக்கும் பொருளாதாரம் வளமாக இல்லை.

பொருளின் தேவை, இயற்கை அமைப்பு பொருள் மனிதனின் படைப்பு ! சில பொருள்கள் இயற்கையாகவும் கிடைக்கலாம்; கிடைக்கின்றன. ஆனாலும் நுகர்வுப் பொருள்கள் அனைத்தும் இயற்கையாய் அமைந்து விடுவ