பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

65



17. பஞ்சாயத்தின் தணிக்கை அறிக்கைகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தால் மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பஞ்சாயத்தே அடிப்படை

நாட்டில் மக்களாட்சி முறையின் வளர்ச்சிக்குக் கிராமப் பஞ்சாயத்து ஆட்சியே அடிப்படை, அது போலவே கிராமப் பஞ்சாயத்து ஆட்சி முறையின் சிறப்பே, நாட்டின் கலசமாகவும் அமைய வேண்டும். கிராமங்கள் நல்ல மக்களாட்சி மரபுகளைப் பேணி, தற்சார்பான வளத்தைப் பெற்றுப் பொலிவுடனும் வளத்துடனும் விளங்கினால்தான் குடியரசுத் தத்துவம் வெற்றி பெறும். இம்முயற்சியில் அனைவரும் ஈடுபடுதல் வேண்டும்.

நிர்வாக அமைப்புகள்

வளமெல்லாம் இன்று உருப்படியாகப் பயன்படவில்லை. நாட்டின் நிர்வாக ஆட்சி அமைப்பில் மைய மாநில அரசுகள் என்ற இருநிலைகள் மட்டுமே உள்ளன. அல்லது இவை இரண்டு மட்டுமே என்று எண்ணுவது பிழை. உண்மையில் நாட்டின் நிர்வாக மையங்கள் மூன்று. கிராமம், மாநிலம், மையம். இவை மூன்றும் அதனதன் எல்லைக்கேற்ப அதிகார உரிமங்களைப் பெறுவதே சிறந்த மக்களாட்சியின் சிறந்த நடைமுறை. மூன்றும் ஒரே சங்கிலியில் உள்ள கணைகள். இவற்றிற்குள் முரண்பாடுகள் அதிகாரச் சண்டைகள் வரக்கூடாது.

காலத்தின் கட்டாயம்

கிராமப் பஞ்சாயத்துகளே மாநில அரசுகளையும் மைய அரசினையும் தாங்கும் நிலையினவாக வேண்டும்; தாங்க வேண்டும். மைய அரசைத் தாங்க வேண்டும். இது அரசியல் சார்ந்த கடமை; பொறுப்புகள் வழிப்பட்ட