பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அனுபவங்களின் நினைவுகள் மேலோங்கி வரும். இதுவே வாழ்க்கையின் நியதி.

நம்பியாரூரருக்குப் பரவையாரை அறிமுகப்படுத்தித் தோழமையாக இருந்து திருமணம் செய்து தந்தருளிய திருவாரூர் இறைவன் கருணைத் திறத்தை எளிதில் மறக்க இயலுமா? திருவாரூர் நினைவு வருகிறது. திருவாரூர் திருவீதி விடங்கப் பெருமான் திருவிழா மண்டபத்தில் காட்சி தருகிறார்; அவர் திருமுன்பு பரவையார் பண்ணின் இசை பாடி நடனமாடும் இனிய காட்சியை அகக்கண்ணால் காண்கிறார். அனுபவ ஆர்வமும் முகிழ்க்கிறது.

உளோம் போகீர் என்றான்!

திருவாரூர் நினைவு சுந்தரருக்கு மேலோங்கியது; திருவாரூர் இறைவனைப் பிரிந்து வாழும் நிலையை நினைந்து வருந்துகின்றார். வாழ்க்கையின் குறிக்கோள் பத்திமை, பிறி தொன்று அடிமைத்தன்மை. இவ்விரண்டையும் இழந்த நிலையை நினைந்து வருந்துகின்றார். திருவாரூர் இறை வனைப் பிரிந்திருக்க இயலாத மனநிலையைப் பெற்றார். தமது தவறுகளுக்கெல்லாம் உடந்தையாய் இருந்தருளிய இறைவனின் தண்ணருளை நினைந்து நினைந்து உருகு கின்றார்.

ஆம்! தோழமை என்பது என்ன? தோழன் தோழன் தான்்! தோழனின் தவறுகளைத் தோழன் விமரிசனம் செய்ய மாட்டான்; மற்றவர்களிடம் தோழனின் தவறுகளைக் கூறமாட்டான். தோழன் தவறுகளுக்குத் தண்டனை தரமாட்டான், துச்சமாக நினைக்கமாட்டான்; உபதேசம் செய்யமாட்டான்! ஏன் ஒரோவழி துரிசுகளுக்கு உடந்தையாகக் கூடப் போவான். பின் உற்றகாலம் வந்துழி, தாயிற்சிறந்த தயாவுடனும் மருத்துவரின் பரிவுடனும் குற்றத்திலிருந்து தோழனை மீட்க முயற்சி செய்வான். தாம்