பக்கம்:குறள் நானூறு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்ட உணவு செரித்ததை அறிந்து செரிக்கத் தக்க உணவைப் பக்குவமாய்ப் போற்றி உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால் நோய் வராது. நோய் இன்மையால் உடம்பிற்கு மருந்து வேண்டிய தில்லை. 30 I

செரிக்கச் செய்யும் வயிற்றுத் தீயின் அளவை அறிந்து அளவான உணவை உண்ண வேண்டும், அந்தத் தீயின் அளவிற்கு அதிகமாக உண்டால் நோயும் அளவில்லாமல் உண்டாகி உடம்பு கெடும். 302

மருத்துவ நூலைக் கற்ற மருத்துவன், நோய் கொண்டவனது உடலின் வலி, பித்தம், கபம் ஆகியவற் றின் அளவை நாடிபார்த்து அறிய வேண்டும். பற்றிய நோயின் அளவை அறியவேண்டும் நோயின் காலத்தை யும் அறிய வேண்டும். மூன்றையும் நினைந்து உரிய வற்றை நிணந்து பார்த்து மருத்துவம் செய்ய வேண் டும். 303

நல்ல குடும்பத்திற்கேற்ற தன்மை உள்ளவர் மூன்றி விருந்து தவறமாட்டார். அவை, நல் ஒழுக்கத்தை ணேத்தல், உண்மை பேசுதல், தம் தவறுக்குத் தாமே நானங்கொண்டு ஒழுகுதல் ஆகியனவாம். 304

நிலத்தில் முளைத்த விதையின் முளை நிலத்தின் வளத் தைக் காட்டும். அதுபோன்று ஒருவனது வாயிலிருந்து வரும் சொல் அவன் பிறந்த குடும்பத்தின் உயர்வு தாழ்வைக் காட்டிவிடும். 認ö郡

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/136&oldid=555633" இலிருந்து மீள்விக்கப்பட்டது