பக்கம்:குறள் நானூறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் சந்திப்பில் அவள் என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வை வருத்தும் அணங்கின் தாக்குதல் போன்றது. அப்பார்வைக்கு எதிராக நான் பார்த் தேன். அதற்கு எதிராக அவள் பார்த்தாளே, அந்தப் பார்வை தாக்கின அணங்கு ஒரு பெரும் படைகொண்டு வந்து தாக்கினது போன்றது. 34

போர்க்களத்தில் எதிர்க்க நினைக்கும் பகைவரும் கேட்டு நடுங்கும் பெருமையுடையது என் வலிமை. அவ் வலிமையின் பெருமை என் காதலியின் ஒளிபொருந்திய நெற்றி அழகு ஒன்றிற்கே தோற்றதே! 342 .

என் காதலியது மை சூழ்ந்த கண்ணில் இருவகைப் பார்வைகள் உள்ளன. ஒரு பார்வை காமத்தை எழுப்பித் துன்பம் தருவது. மற்ருென்று அத்துன்பத் திற்கு மருந்தாகிக் காதல் இன்பத்தை அரும்ப வைப்பது. 343 என் காதவி ஒற்றைக் கண்ணைச் சுருக்கி என்னைப் பார்க்கும் பார்வை, அளவில் சிறிதுதான், அச்சிறு

பார்வை அவள் கொண்ட காமத்தில் நேர் பாதி மட்டும் அன்று. அந்தப் பாதி அளவினும் மிகப் பெரிது. - 344

காதலர் இருவரது கண்களோடு கண்கள் இணை இணையாய்ப் பார்வையில் ஒன்றி ஒத்துவிட்டன. ஒத்தாற்போல் இமையடித்து அன்பைப் பேசிக் கொள்ளுகின்றன. இப்பேச்சுக்குமுன் காதலர் வாய டைத்துப் போயினர். வாய் திறந்து பேசினலும் எப்பயனும் இல்லாது போகும். 3.43

142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/154&oldid=555651" இலிருந்து மீள்விக்கப்பட்டது