பக்கம்:குறள் நானூறு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தானகவே பாழும் தும்மல் ஒன்று வந்தது. இதற்கு என்ன் சொல்வாள்ோ என்று அஞ்சித துப மலை அடக் இனேன். அடக்கியதை அறிந்துகொண்டாள். 8:உமக்கு விருப்பமானவரை நினைப்பதை எமக்கு மறைத்திரோ" என்று வினவி அழுதாள். 396

உணவை உண்பது நல்லது. அதைவிட உண்ட உணவு செரித்தபின் உண்பது நன்மையாகும், அது போன்று. காமத்தோடு கூடுவது இன்பம். அதைவிட ஊடல்கொண்டு கூடுதல் இன்பமாகும். 397

ஊடற் போரில் தோற்கின்ற்வரே வெற்றிகொண்ட வர் ஆவர். அவ்வெற்றி ஊடம் தீர்ந்து கூடிக் குலவி இன்பம் கொள்ளும்போது காணப்படும். 398

ஒளி உமிழும் கல் இழைத்த அணிகளை அணிந்த என் காதலியின் ஊடல்.ழகு ஓர் இன்பம். எனவே, என்னுடன் ஊடல் கொள்ளுவாளாக! அவ்வூடலேத் தீர்க்க யான் செஞ்சி இரந்து நிற்க இந்த இரவுப் பொழுது நீண்டுகொண்டே இருப்பதாக! 399

காமத்திற்கு இன்ப மெருகேற்றுவது ஊடல். ஊடல்

தீர்ந்து கூடித் தழுவப் பெறுவது அவ்வூடலுக்கு இன்ப மாகும. 400

164

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/176&oldid=555673" இலிருந்து மீள்விக்கப்பட்டது