பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 குறிஞ்சிமலர்

பரப்பை அவள் கண்டுணர்ந்தாள். அந்த இரவில் தான் மீனாட்சி அச்சக உரிமையாளர் அவளைச் சந்தித்துத் தம் காரிலேயே திருபரங்குன்றத்தில் கொண்டு போய் விட்டு அரவிந்தனோடு திரும்பினார். அரவிந்தனும் அவளும் பஸ் நிலையத்துக்கு வெளியே மழையில் நின்று கொண்டிருந்த போது நல்ல வேளையாக அவர் வந்து உதவினார். அந்தப் பெரியவரின் உதவி அவளுக்கு வாழ் நாள் நெடுங்கிலும் தொடர்ந்து கிடைக்க இருந்ததற்கு அது ஒர் அடையாளமா?

அதன் பின்னர் கழிந்த சில வாரங்களில் அவள் வாழ்விலும், அவளைச் சூழ்ந்திருந்த வாழ்விலும்தான் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்து விட்டன. மாளிகை போல் பெரிய வீட்டில் இருந்து பழகிவிட்ட பின் சிறிய இடத்தில் புதிதாகக் குடியேறிய வீட்டின் குறுகிய வசதிகளைப் பழக்கப் படுத்திக் கொண்டாள் அவள். செல்வத்தோடும் வசதிகளோடும் வாழ்வதற்கு முயற்சியே வேண்டியதில்லை. ஆனால் ஏழ்மையோடும் வசதிக் குறைவுகளோடும் வாழப் பழகிக் கொள்ள முயற்சிதானே வேண்டும். சிறிய தம்பிக்குக் கைக் கட்டு அவிழ்த்தாயிற்று. ஏறக்குறைய கை சரியாகிக் கூடி விட்டது. அவன் முன்போல் தன் அண்ணனோடு பள்ளிக் கூடம் போகத் தொடங்கி விட்டான். புது மண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் பொய்யும் புளுகுமாகக் கணக்குக் காண்பித்துப் பூரணி எதிர்பார்த்திருந்த தொகைக்குச் சரிபாதிகூடத் தேறாத ஒரு தொகையைக் கொண்டுவந்து கொடுத்து விட்டுப் போனார். அரிய முயற்சியின் பேரில் அப்பாவின் சேமிப்பு நிதியில் கல்லூரிப் பங்குக்கு உரிய ஒரு பகுதி வந்து சேர்ந்தது. சாதாரணமாக மாதக் கணக்கில் காலந் தாழ்த்திக் கிடைக்க வேண்டிய பணம் அது. அனுதாபமுள்ளவர்களின் உதவியாலும், கல்லூரி முதல்வர் காட்டிய அக்கறையாலும் தான் அவளுக்கு அவ்வளவு விரைவில் கிடைத்ததென்று சொல்ல வேண்டும். மீனாட்சி அச்சக உரிமையாளரும், அரவிந்தனும் அவளுடைய தந்தையின் நூல்கள் ஒழுங்காகவும், முறையாகவும் வெளிவருவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.

காலையில் வீட்டுவேலைகளும் மாலையில் மங்கையர் கழகத்தில் வகுப்பு நடத்தும் வேலைகளும் இருந்ததனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/118&oldid=555842" இலிருந்து மீள்விக்கப்பட்டது