பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 குறிஞ்சி மலர்

நுழைவதைப் பார்த்ததும் விருட்டென்றெழுந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு பக்கத்து அறைக்குள் புகுந்து விட்டாள் பூரணி. வசந்தா எழுந்திருந்து படங்களை வாங்குவதற்காக அரவிந்தனுக்கு அருகில் வந்தாள். 'அண்ணா! அக்காவுக்கு உங்கள் மேல் ஒரே கோபம். நேற்று மாலை தோட்டத்தில் புல் தரையில் நீங்களும் அம்மாவும் அமர்ந்து கல்யாண விஷயமாகப் பேசின போது நானும் பூரணியக்காவும் சவுக்குவேலிக்கு அப்பால் மறு பக்கத்தில் தான் உட்கார்ந்திருந்தோம். அக்கா நீங்கள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டார்கள். தோட்டத்திலேயே கண்ணில் நீர் தளும்பி விட்டது அக்காவுக்கு ' என்று அவன் காதருகில் மெல்லச் சொன்னாள் வசந்தா. -

'அடப் பாவமே! அதுதானா இந்தக் கோபம்?' என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே படங்களை வசந்தாவின் கையில் கொடுத்தான் அரவிந்தன். பூரணியின் கோபத்தைப் போக்கிவிட வேண்டுமென்று அவள் புகுந்து கொண்ட அறையில் நுழையச் சென்றான். அவன் முகத்தில் இடிக்காத குறையாக அறைக்கதவு படீரென்று அடைக்கப்பெற்றது. உட்புறம் தாழிடும் ஒலியும் கேட்டது. -

"புகழேந்திப் புலவர் கதவு திறக்கப் பாடின மாதிரி நான் ஏதாவது பாடிப் பார்க்கட்டுமா, அரவிந்தன்?' என்று குறும்பு பேசினான் முருகானந்தம்.

"நீங்கள் அண்ணனுக்கு வேண்டியவர்கள். நீங்கள் பாடினால் அக்கா உள்ளே இரட்டைத் தாழாகப் போடுவார்கள் என்று வசந்தா முருகானந்தத்தைக் கடைக்கண்ணால் பார்த்துப் புன்னகை யோடு கூறினாள். அவளே மேலும் கூறலானாள்:

'அண்ணனும், அக்காவும் எடுத்துக் கொண்டிருக்கிற படம் 'கலியாணப் படம் மாதிரி இல்லையா? மாலை போட்டுக் கொள்ளாததுதான் ஒரு குறை?"

'அதில் சந்தேகமென்ன? இந்தப் படம் எடுத்துக் கொண்டுவரப் போனபோது நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டார்கள் பார்த்தாயா!' முருகானந்தமும், வசந்தாவும் அவனைப்பற்றிப் பேசினார்கள். ஆனால் அவன். அப்போது அவற்றை இரசிக்கிற நிலையில் இல்லை. பூரணிகூடத் தன்னைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/344&oldid=556067" இலிருந்து மீள்விக்கப்பட்டது