பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 குறிஞ்சி மலர்

என்ன ஆகப்போகிறது? கண்களைத் துடைத்துக்கொண்டு முருகானந்தத்தோடு சேர்ந்து தானும் மேலே நடக்க வேண்டிய காரியங்களைக் கவனிக்க ஆரம்பித்தான் அரவிந்தன். யார் யாரோ வந்தார்கள். என்ன என்னவோ சொல்லித் துக்கம் கேட்டார்கள். எதை எதையோ நினைவு படுத்தினார்கள். ஒன்றுமே நினை வில்லாமலும், நினைவிலேயே ஒன்றுமில்லாமலும் வேலைகளில் அவன் இயங்கிக் கொண்டிருந்தான்.

மீனாட்சி சுந்தரத்தின் மக்களில் மூத்தவர் மூவரும் பெண்கள். முதல் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து கொடுத்திருந்தார். மூத்த பெண்ணுக்குத் திருநெல்வேலியிலும், அடுத்த பெண்ணுக் குத் திருச்சியிலும் சம்பந்தமாயிருந்தது. மூன்றாவது பெண் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுத் திருமண வயதில் வீட்டில் இருந்தாள். கடைசியாகப் பத்துப் பன்னிரண்டு வயதில் ஒரு பையன் இருந்தான்.

பெண்கள் வருவதற்காகத் திருச்சிக்கும் திருநெல்வேலிக்கும் அவசரமாகத் தந்திகள் கொடுத்திருந்தான் முருகானந்தம். பெண்கள் வந்து பார்ப்பதற்கு முன்னால் சவத்தை எடுக்க வேண்டாமென்று திருமதி மீனாட்சிசுந்தரம் கூறியிருந்தாள். அரவிந்தன் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் கோடைக் கானலிலிருந்து பூரணி, மங்களேசுவரி அம்மாள் முதலியவர்கள் காரில் வந்து விட்டார்கள். அவர்களுக்கும் முருகானந்தம் தந்திகொடுத்திருந்தான் போலிருக்கிறது. பெண்கள் கூட்டம் உள்ளே அதிகமாக, அதிகமாக, அழுகைக் குரல் ஒலியும் அதிகமா யிற்று. உறவினர்களும் நண்பர்களும் பழகிய பிரமுகர்களுமாக வாயிலில் ஆண்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு மனிதன் உண்மையிலேயே நல்லவனாகவும், பெருந்தன்மை உள்ளவனாகவும் இருந்தான் என்பதற்கு அடையாளம் அவன் வாழும்போது கூடுகிற கூட்டம் அல்ல. மரணத்தின் போது கூடுகிற கூட்டம்தான், மனிதனுடைய பெருந்தன்மையை மாற்றுக் காணச் சரியான கட்டளைக் கல். மீனாட்சி சுந்தரம் இறந்ததும் அவர் வீட்டில் கூடியிருந்த கூட்டம் அவர் பெருமையை நன்றாகக் காட்டியது. அச்சகத்து ஊழியர்கள் கண்ணிர் மல்கக் கூடி நின்றார்கள். ஊர் நடுவில் நிழல்தந்து கொண்டிருந்த, பெரியமரம் திடீரென்று சாய்ந்து முறிந்து விட்டாற்போல் அந்த மனிதரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/362&oldid=556085" இலிருந்து மீள்விக்கப்பட்டது