பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - குறிஞ்சிமலர் போன்று சில்வண்டு கீச்சிடும் அமைதி படர்ந்து விட்டிருந்தது. ஸ்டோர் வாசலில் வேப்ப மரத்தின் கீழே பீடிப் புகையை இழுத்தவாறு உட்காந்திருந்த ஒரு ஆள் அவர்கள் கூப்பிடாமலே எழுந்து வந்து தானாகச் சில விவரங்களை அன்போடு அவர் களுக்குச் சொன்னான். - 'செட்டியாரு விளக்குக் கனெக்ஷன் வாங்கிட்டாரு அம்மா! இன்னும் ஒரு வாரத்துக்குள்ளாற விளக்கு வந்து விடும். நீங்க சொன்னாப்போல் நாலஞ்சி ரூம் காலியில்லை இப்போ, எல்லாம் வந்து அட்வான்ஸ் கொடுத்திட்டுப் போயிட்டாங்க, ஒரே ரூம்தான் இருந்திச்சு; நானும் ஸ்டோர்காரச் செட்டியாரும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த மரத்தடியிலே தான் பேசிக்கிட்டிருந் தோம். இப்ப தான் ஒரு ஆளு அட்வான்சோட வந்து கெஞ்சினாரு செட்டியாரும் அவருமாப் பேசிக்கிட்டே சரவணபொய்கை ஒரமா நடந்து போனாங்க. அவருக்கிட்ட இருந்து செட்டியார் முன்பணம் வாங்குறதுக்குள்ள நீங்க பார்த்துட்டீங்கன்னா ஒரு வேளை பெண் பிள்ளைன்னு இரக்கப்பட்டு ரூமை உங்களுக்கே விட்டாலும் விடுவாரு - நரைத்த மீசையும் பூனைக் கண்களுமாகத் தோன்றும் அந்த நோஞ்சான் கிழவன் சமயத்தில் வந்து கூறியிரா விட்டால் 'நாளைக்கு வந்து பார்த்துப் பேசிக் கொள்ளலாம் என்று பூரணியும் கமலாவும் திரும்பிப் போயிருப்பார்கள்.

'இப்போது இருக்கிற ஏழைமையில் பன்னிரண்டு ரூபாய்க்கு வீடு கிடைத்தால் எனக்கு எவ்வளவோ நல்லது கமலா; இதையே பார்த்து விடாலாம் என்று நினைக்கிறேன். தம்பிகளுக்கும் எனக்கும் நடை முன்னைவிடக் கூடும். அதைப் பார்த்தால் முடியாது’ என்று கமலாவின் காதில் மெல்லச் சொன்னாள் பூரணி, கமலாவுக்கு பூரணியின் அவசியம் புரிந்தது.

'எனக்கு இந்த ஸ்டோர்காரச் செட்டியாரை நன்றாகத் தெரியும் பெரியவரே! நான் சொன்னால் அவர் தட்ட மாட்டார். என் தந்தைக்கு மிகவும் வேண்டியவர் அவர். நீங்கள் கொஞ்சம் எங்களுக்கு அவர் இருக்கிற இடத்தைக் காட்டி உதவினால் நன்றி உள்ளவர்களாக இருப்போம்' என்று கமலா அந்தப் பூனைக்கண் கிழவனைக் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/52&oldid=555776" இலிருந்து மீள்விக்கப்பட்டது