பக்கம்:குறும்பா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

கோவேந்தன்


எங்கள் நல்ல கல்வி திட்ட தேர்வு!
எண்ணிப்பார்த்தால் அத்தனையும் சோர்வு!
தங்களுடைய விழிப்பிலாத
தரம் இலாத வினாஅனைத்தும் சார்வு,
இங்கெழுதும் நுண்மதிஞர்
இருளில்ஒளி ஆகும்அதே தீர்வு!



பேராசையால் மக்கள் தலைவன் ஆனான்
பெருவிழாக்கள், புகழ் மாலைக்குள்ளானான்;
ஒராண்டின்பின் தேர்தல்வர
ஓங்கியகல் லடிகளினால் போனான்;
ஊராள வருபவர்கள்
ஒழுக்கமற்றால் ஒழிபடச் சான் றானான்!



“வாழ்விலக்கியம் வாழ்தல்” என்றார் ஒருவர்
“வாழ்வை எழுதல் அது” என்ருர்மற் றொருவர்;
"வாழ்வின் குறிக் கோளனைத்தும்
வருவாய்” என்ருர் பேராசிரியர் அறுவர்.
“வாழ்வாவது மண்ணாவது
வரைந்துதள்ளவே எழுத்து” என்ருர் பன் னிருவர்!



மதுவிலக்குத் துறையமைச்சர் மனைவி
மதுவிலக்கா அமைச்சர்க்கேற்ற துணைவி!
எதுவிலக்க வேண்டும் என்றே
எடுத்த ஏலக் காரர்களை வினவி,
அதுவிலக்கி ஐந்துகோடி
அள்ளிக்கொண்டாள் கற்புக்கரசி முணகி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/59&oldid=1195871" இலிருந்து மீள்விக்கப்பட்டது