பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

அது மட்டுமா தங்கச்சிக்குப் பல்லும் எலும்பும் உண்டாக வேண்டுமல்லவா? அதற்கு அம்மாவினுடைய பல்லில் உள்ள சத்து கரைந்து அவளுடைய ரத்தத்துடன் கலந்து தங்கச்சிக்கும் போய் அவளுக்குப் பல்லும் எலும்பும் உண்டாக்குகின்றன. அதனால் அம்மாவுக்கு அந்தச் சமயம் அடிக்கடி பல்வலி கூட உண்டாகும். நீ கூடச் சொல்லவில்லையா, அம்மா அடிக்கடி வாந்தி பண்ணுவாள், சாப்பிட்ட உணவு கூட வயிற்றில் தங்காமல் வந்துவிடும். சில வேளைகளில் கால்கூட வீங்கிவிடும். கடைசி மாதங்களில் நல்ல துாக்கம் வராது. எழுந்திருக்கவும் நடக்கவும் முடியா மலிருக்கும். இப்படி அம்மாவுக்குத் தான் அதிகக் கஷ்டமாயிருக்கும். உன்னுடைய தங்கச்சியிருக்கிருளே, அவளுக்கு என்ன கஷ்டம், அவள் சுகமாக ஆடி விளையாடிக் கொண்டிருந்தாள்.

பாப்பா:- அப்பா! தங்கச்சி விளையாடிக் கொண்டிருந்த தாகச்சொல்லுகிறாயே. ஆனால் நீ ஆண் தாதுவும் பெண் முட்டையும் சேரும்போது கண்ணுக்குத் தெரியாததாக இருக்கும் என்று சொன்னயே. அப்படியானல் தங்கச்சி அம்மா வயிற்றுக்குள் விளையாடுவது எப்படி?

அப்பா:- அம்மா! நீ கேட்கிறது சரிதான். ஆனால் ஆண் தாதுவும் பெண் முட்டையும் சேர்ந்து கர்ப்பப்பைக்கு வந்து வளர ஆரம்பித்த காலத்திலேயே உன்னுடைய தங்கச்சி விளையாடக்கூடிய பருவத்தை அடைந்துவிடவில்லை. அவள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துதான் பெரியவள் ஆவள் அம்மா!

பாப்பா:- அப்படியானால் அவள் முதலில் எப்படியிருந்தாள். பிறகு எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தாள் என்பதை எல்லாம் எனக்குச்சொல்லு அப்பா!

அப்பா:- அம்மா! ஆரம்பத்தில் கண்ணுக்குத் தெரியாதிருக்கும் கரு, இரண்டு வாரத்தில் ஒரு அரிசி