பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

வயிற்றின் மீது கைவைத்துப் பார்த்தால் கூட தங்கச்சி விளையாடுவது தெரியும். இப்போது தங்கச்சியைத் தூங்க வைப்பதற்காக அம்மா சில சமயங்களில் மெதுவாகத் தட்டுகிறாள் அல்லவா? அதுபோல் அப்பொழுதும் அவளை மெதுவாகத் தட்டித் துங்கும்படி செய்யலாம். இப்படிச் சிறுகச்சிறுக வளர்ந்து 10 மாதத்தில் ஆறு ஏழு ராத்தல் நிறையும் இரண்டு சாண் நீளமும் உடையவளாக ஆகி விடுகின்ருள்.

பாப்பா:- அப்புறம் அம்மா வயிற்றில்ருந்து வெளியே வந்து விடுகிறாள். இல்லையா! அப்பா?

அப்பா:- ஆம் அம்மா!

பாப்பா:- ஆனால் அப்பா அவள் எப்படி வெளியே வந்தாள் அதைச்சொல்லு.

அப்பா:- அம்மா! அம்மாவினுடைய மூத்திரத் துவாரத்துக்கு அருகில் ஒரு துவாரம் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா?

பாப்பா:- ஆம் அப்பா! அது வழியாகத்தான் அப்பாவினுடைய ஆண் தாது அம்மாவினுடைய கர்ப்பப்பைக்குள் போய் அதனருகிலுள்ள குழாயில் வைத்து பெண் முட்டை யோடு சேர்ந்ததாகச் சொன்னாய்.

அப்பா:- ஆம், அம்மா, அது உனக்கு ஞாபகமிருக்கிறதா அதுதான் நல்லது. அந்த வழியாகத்தான் தங்கச்சி வெளியே வந்தாள்.

பாப்பா:- அப்பா! அது எப்படி முடியும், ஆண் தாது கண்ணுக்குத் தெரியாது, அவ்வளவு சிறியது என்று சொன்னாய். அது அந்த வழியாகச் செல்ல முடியும். ஆனால் தங்கச்சி அப்படிச் சிறியவளா, இல்லையே, அப்படியிருக்க அவள் எப்படி அந்தத் துவாரத்தின் வழியாக வரமுடியும்?

அப்பா:- ஆம் , அம்மா, அது சின்னத் துவாரந்தான். சாதாரண காலத்தில் அந்தத் துவாரத்தில் ஒரு விரல்தான்