பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


4.7 தோழரைத் தேர்ந்தெடு (Find a Partner)

ஒற்றைப்படையில் எண்ணிக்கை இருப்பது போல, மொத்த ஆட்டக்காரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். (உம்) 19, 27, 35 என்பது போல ஆட்டக்காரர்கள் எல்லோரும், மைதானம் முழுவதுமாக, பரந்து நிற்பது போல, நிற்கச் செய்து விட வேண்டும்.

விசில் ஒலி மூலம் சைகை கொடுத்தவுடன், பரந்து நின்று கொண்டிருந்தவர்கள் எல்லோரும், பரபரப்புடன் ஓடி, தனக்குத் தோழர் (Partner) ஒருவரைத் தேடிப்பிடித்து, முதுகு முதுகு ஒட்டியவாறு நின்று கொள்ள வேண்டும்.

தோழர் யாரும் கிடைக்காமல் நிற்கிற ஒருவர் இருப்பாரே! அவர் மீது தவறு என்று குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

இப்படி 3 முறை தோழர் கிடைக்காமல் தவறிப் போகிறவருக்கு, ஏதாவது ஒரு தண்டனை கொடுக்க, ஆட்டம் மீண்டும் தொடரும்.

தண்டனை என்பது நகைச்சுவை அளிப்பது போல, தமாஷாக இருக்க வேண்டும்.

4.8. வணக்கம் வணக்கம் (Good Morning)

ஆட்டக்காரர்கள் அனைவரையும் கை கோர்த்துக்கொண்டு, ஒரு பெரிய வட்டம் போட்டு நிற்கச்