பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


2. வலது கால் முன்னே ஓரடி எடுத்து, வைத்து கொடிகளை முன்புறமாகக் கொண்டு வந்து, குறுக்காக வைக்கவும்.

3. முதல் எண்ணிக்கைக்குக் கொண்டு வரவும்.

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.

7. 1. இடது காலை பக்கவாட்டில் ஓரடி எடுத்து வைத்து, கைகளை இருபுறமும் தோளுயர அளவுக்கு உயர்த்தி, கொடிகளை படுக்கை வாக்கில் நீட்டவும்.

2. வலது பக்கமாக வளைந்து குனிந்து, முகத்தை வலது புறமாகத் திருப்பிப் பார்த்து, கைகளை தலைக்கு மேற்புறமாக உயர்த்த வேண்டும்.

3. முதல் எண்ணிக்கைக்குக் கொண்டு வரவும்.

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.

8. 1. இடது காலை முன்புறமாக ஒரடி எடுத்து வைத்து முன்புறமாக சாய்ந்து, வலது கையை தோளுயர அளவுக்கு பக்க வாட்டில் நீட்டி, இடது கையை மடித்து முன்புறமாக வலது தோளின் பகுதிக்கும் கொண்டுவந்து, கொடிகளை உயரவாக்கில் பிடித்து நிற்கவும்.

2. வலது காலை பின்புறமாகக் கொண்டு சென்று. இடது கையை இடது பக்கமாக நீட்டி விரித்து, வலது கையை இடது கை தோள்புறமாகக் கொண்டு வந்து,