பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்


புறத்திற்கு கம்பினை மாற்றிக் கொண்டு வந்து, முழங்கால்களை மடித்து உட்காரவும்.

3. முதல் எண்ணிக்கை நிலைக்கு வரவும்.

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.

இது போல், நீங்களே பல விதங்களில், முடிந்த அளவு பயிற்சிகளை வித்தியாசமான முறைகளில் அமைத்து, கொடுக்கவும்.

11.3. டம்பெல்ஸ் பயிற்சிகள் (Dumbells Drills)

இருபுறமும் குண்டு போல உருண்டை வடிவிலும், மத்தியிலும் கைப்பிடிப்பதற்கேற்ற அமைப்பிலும், மரத்தால் செய்யப்பட்ட உருளைக் குண்டினை வைத்து, செய்யப்படும் பயிற்சிகளே டம்பெல்ஸ் பயிற்சிகளாகும்.

இதில் 16 எண்ணிக்கைக்குப் பயிற்சிகள் செய்யலாம்.

இந்தப் பயிற்சியில் ஆரம்ப நிலை என்பது, கை ஒன்றில் ஒரு உருளைக் குண்டினை வைத்துக் கொண்டு, கைகளைத் தொங்க விட்டுப் பக்க வாட்டில் தொடை அருகில் வைத்திருக்கலாம்.