பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


அல்லது, இரண்டு கைகளையும் முன்புறமாக மடக்கி, நெஞ்சுக்கு அருகில் (முன்புறமாக அல்ல) வைத்துக்கொண்டிருக்கும் முறையிலும் வைக்கலாம்.

பயிற்சிகளுக்கேற்ப, ஆசிரியர் கொடுக்கின்ற அறிவுரைப்படி, ஆரம்ப நிலையை வைத்துக் கொள்ளலாம்.


பயிற்சிகள் :

1.1. இடது காலை முன்புறமாக வைத்து, கைகளை முன்புறமாக நீட்டவும்.

2. கைகளைப் பக்கவாட்டில் விரித்து நீட்டி, இடது காலை இடது புறமாக வைக்கவும்.

3. முதல் எண்ணிக்கை நிலைக்கு வரவும்.

4. ஆரம்ப நிலை.

2.1. கைகளை முன்புறமாக உயர்த்தி, தலைக்கு மேற்புறமாக உயர்த்தி, இடது காலை ஓரடி பின்புறம் எடுத்து வைக்கவும்.

2. கைகளை முன்புறமாகத் தாழ்த்திக் கொண்டு வந்து, மார்புக்கு முன் நிறுத்தி, இடது காலை முன்புறமாகக் கொண்டு வரவும்.