பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


3. 1.கைகள் இரண்டையும் பக்க வாட்டிற்குக் கொண்டு போய் தலைக்கு மேல் உயர்த்தி, இடது காலை இடப்புறமாக பாதத்தினால் ஊன்றிவை.

2.கைகளை உட்புறமாக வருவது போல முன்னும் பின்னும் சுழற்றி, இடது காலை பின்புறமாக ஒரடி எடுத்து வை.

3.முதலாம் எண்ணிக்கைக்கு வரவும்.

4.ஆரம்ப நிலை.


4. 1.தலைக்கு மேலே கைகளை உயர்த்தி கைகளை தலைப்பக்கமாக மடித்து, இடது காலை எடுத்து, முன்புறத்தில் வை.

2.இடுப்பை முன்புறமாக வளைத்து, தரையில் டம்பெல்ஸ் படும்படி குனிந்து நில்.

3.முதல் எண்ணிக்கைக்கு வரவும்.

4.ஆரம்ப நிலை.


5. 1.முன்புறமாக கைகளை நீட்டி மடித்து, வைத்து, இடது காலை பின்புறமாக ஒரடி

எடுத்து வை.