பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றி: எழுதினேன் கவிதை, எழுதுக என்றெனே முழுதும் தூண்டிய முருகு சுப்பிர மணியரே ! சுடச்சுடப் பொன்னியில் அப்பொழு தப்பொழு தழகுறத் தந்தனிர். அவ்வழி பற்றிய செவ்விதழ் நண்பரீர் ! கவிதையைத் தொகுத்திடக் கைகொடுத் தவர்காள் ! கவிக்கொரு மதிப்புக் கருத்துரை வழங்கிய பேராசிரியப் பேரியீர்; மேன்மைக் கவிஞரீர், மேடைச் செம்மவீர்; தேன்சேர் எழுத்துளிர், தெவிட்டா அன்பரீர் ! யாங்ஙனம் புகழ்வேன் ஓங்குறும் பேருளம் ? நிறைவச் சேற்றிய மறைமலை அச்சக நலங்கொள் சாமி நடரா சஓவிய ! உளங்குடி கொண்டே ஒண்டமிழ் பயில்வீர் ! விழாச்செய் துயர்த்திய விழாக்குழு நண்பர்காள் ! உள்ளத் துனர்வெலாம் ஒருசொல் லாக்கி அள்ளக் குறையா அன்பிற் குழைத்து நன்றி நவின்றனன்; என்றும் மறவனே. (இண்க்குறள் ஆசிரியப்பா.) கோவை. இளஞ்சேரன்.