பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். படையொருகை கோலொருகை கொண்டே படைஞரவர் ஆட்சியெழுந் திட்டால், புடைபெயரும் பெருந்தலைகள் சாயம் பொள்ளெனவே வெளுப்பதைநி னேந்தோ, தடையதுவுங் குடைவதுவும் வீணே தாக்குவதால் தளர்ந்தபொது மக்கள் தொடைநடுங்கும் நிலைநினைந்தோ முல்லாய், தொடர்ந்தவெடிச் சிரிப்புற்ருய் சொல்லாய் ? "ஊர்பறிக்கும் வணிகரவர் மிக்கார்: "ஊதாரி'ச் செலவினத்தார் ஆள்வோர்: நேர்மையதை விற்றுவளர் செல்வர்: நெடுந்துக்க மந்தைகளாம் மக்கள்: பேரிவற்றின் அறிகுறியே கண்டீர், பெரும்படைஞர் ஆட்சிமூண்ட தென்றே ஊர்சிரிக்க சிேரித்தாய் போலும் ! உன்சிரிப்பை அடக்களவர்க் கேலும் ? (அறுசீர் ஆசிரிய விருத்தங்கள். )

  • கோல் - ஆட்சி.

89.