பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். 'கரம்பையினைப் பண்படுத்திக் கழனி யாக்கிக் கணக்கில்லாப் பொருள்குவித்துக் கனிந்த நாங்கள் கிரம்பாத மூளிகளாய் நிலவும் போதில், நிலவொளிபோல் உடலமைந்த விேர் சில்லோர் வரம்பில்லாச் சுவைபெறுதல் ஏன் ஏன்' என்றே வல்லுழவர் கேட்டுவிடின் வளைந்த அன்னர் நரம்பெல்லாம் முறுக்கேறித் துடித்துப் போகும்; அத்துடிப்பே மேதினமாய் வெடித்துப் போகும் ! பல்லிளித்து வந்தவர்கள் பதவி பெற்றுப் பழையவரைச் சுரண்டலொடு தாழ்த்து கின்ற பொல்லாங்கு தீரத்தம் வாழ்வு வேண்டிப் பொங்கியெழுந் தாழ்ந்தவரின் கிளர்ச்சி யெல்லாம் வெல்லவரும் மேதினத்தின் மறு பதிப்பாம், வளவாழ்வில் தருக்கிநிற்பீர்! தாழ்ந்த வர்கள் சொல்லுகின்ற மேதினத்தின் செய்தி உங்கள் செழிப்புக்கே எச்சரிக்கைச் செய்தி யாகும் ! 95