பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் "நிறையீட்டால் குறைதவிர்க்கும் எங்கள் வாழ்வின் குறையீட்டைத் தகர்த்திடுமின்' என்று ழைப்போர் அறைகூவி நெஞ்சழுகிக் கூறு கின்ற முறையீட்டைப் புறக்கணித்தல் , மடமை யாகும், முறையீடு முறைப்பாடாய் மாறிப் பின்னர் முறைப்பாடும் தாக்கீதாய் மீறிப் போனுல் சிறையீட்டின் தலையீடு செல்லா தாகும்; சொல்லிவைத்தோம்; மேதினந்தான் வெற்றி சூடும் ! (எண்சீர் ஆசிரிய விருத்தங்கள், ! 96