பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சங்க இலக்கியத்தில் உவமைகள்

‘வாழ்வோர் போன பிறகு அப்பாழ்பட்ட இடத்தைக் காத்திருந்த

தனிமகனுக்கு உவமப் படுத்துகின்றாள். இத் தனிமகன்

புலவரின் உவமைப் பொருளாக அமைந்தது தனிச் சிறப்பாகும்.

ஈண்டொழிந்து

உண்டல் அளித்தென் உடம்பே விறற்போர் வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேரூர்ப் பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே. நற். 135/1-10,

1.9.15. தேய்புரிப் பழங்கயிற்றனார்: கடமையுணர்வு ஒரு புறமும் காதல் நினைவு ஒரு புறமும் ஈர்க்க வீடு திரும்ப விழையும் தலைமகனின் மன நிலையை இவ்உவமை சித்திரிக்கப் பயன்படுகிறது. இரண்டு களிறுகள் இரண்டு பக்கம் எதிர் எதிராகப் பற்றி இழுக்க இடையில் தேய்ந்து விட்ட பழங்கயிறு அற்று விழும் நிலையை அடைவது. இவ்விரண்டு உணர்வுகளால் அலைமோதுண்டு அழியும் அவன் உடம்புக்கு உவமப்படுத்தப்படுகின்றது.

ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய

தேய்புரிப் பழங்கயிறு போல

வீவதுகொல் என் வருந்திய உடம்பே

-நற். 284/9-11.

1.9.16. பதடி வைகலார்: தலைவியின் தோள்களிலே துயின்ற நாள்களே வாழ்ந்த நாள்கள் எனப் போற்றப்படும். ஏனையநாள் எல்லாம் வீணாகக் கழித்த நாள்களாகும். அவை உள்ளீடு இல்லாத கருக்காயைப் போன்ற நாள்கள் என உவமிக்கப்படுகின்றன.

எல்லாம் எவனோ பதடி வைகல்

பசுமுகைத் தாது நாறு நறுநுதல் அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாள் இவண் வாழு நாளே” -குறு.323/1,5-7.

1.9.17. மீனேறி தூண்டிலார்: காட்டுவாழ் யானை வளைந்து இழுத்துப் பின்னர்க் கைவிடும் பசிய மூங்கில் மீன் எறி தூண்டிலை நிகர்ப்பதாக ஒர் உவமை அமைக்கப்படுகிறது. மீனெறி தூண்டிலின் வளைவும் திடீரென்று அது மேல் ஓங்கி எழுதலும் ஒரு தனிக்காட்சியாகும். அக்காட்சியானைகழையை