பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சங்க இலக்கியத்தில் உவமைகள்

12.1.2.அ.

மடியிலான் செல்வம்போல் மரம்நந்த அச்செல்வம் படிஉண்பார் நுகர்ச்சிபோல் பல்சினை மிளுறு ஆர்ப்ப மாயவன் மேனிபோல் தளிர்ஈன அம்மேனித் தாய சுணங்குபோல் தளிர்மிசைத் தாதுஊத,

- -கலி, 35|1-4

'செல்வம்' 'மேனி என்ற சொற்கள் அந்தாதியாக மீண்டும் தொகுக்கப்பட்டுள்ளன. 'செல்வம்' 'மேனி ஆகிய உவமைகள் அடுத்துவரும் செய்திகளுக்குத் துணையாக நிற்கின்றன.

12.1.2.ஆ.

அணிமுகம் மதியேய்ப்ப அம்மதியை நனியேய்க்கும் அணிமுகம் மாமழை நின்பின் ஒப்பப் பின்னின் கண் விரிநுண்ணுல் சுற்றிய ஈரிதழ் அலரி.

-கலி, 64/1-3

அணிமுகம், மதி, பின் (பின்னல்) என்பன அடுத்து வரும் பொருள்களுக்கு உவமையாக நின்றுள்ளன.

இவ்வந்தாதி உவமைகளுள் வந்த சொற்களே மீண்டும் மீண்டும் வருதல் ஓசை இனிமையும், சொல்லழகும், தொடையழகும் பெற்று விளங்குமாறு செய்கிறது.

12.2. இடம் மாற்று உவமை

பொருளின் இயல்பும் தன்மையும் உவமைக்கு ஏற்றிக் கூறும் அழகு ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. அதே போல உவமையின் தன்மையும் பொருளுக்கு ஏற்றிக் கூறப்படுகின்றது. இதனை இடம் மாற்று உவமை எனக் கூறலாம். இவ் அணியைச் சமாதி' என்பர் தண்டி அலங்கார ஆசிரியர்.

'உரிய பொருளின்றி ஒப்புடைப் பொருள்மேல் தரும்வினை புணர்ப்பது சமாதி யாகும்'

-தண்டி.சூ.25

12.2.1. ஒரு தலைவியின் நெற்றியில் அணியப்படும் திலகத்தைத் திங்களுக்கு ஏற்றி அது திலகம் தாங்கியுள்ளதாகவும் அத்தகைய மதி அவள் முகத்திற்கு நிகரென்றும் கூறப்படுகிறது.