பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 165

பகுப்பின் இயல்பும் முறையும் இவ்உவமையில் காணப் படுகின்றன. பேரரசன் குடை மற்றும் இரண்டு அசரர்களின் குடைகள் பின்வரச் சிறந்து ஒங்கிக் காட்சி அளித்தது என்னும் பொருளைக் கூறுவதற்கு இவ்உவமை தரப்படுகிறது.

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படுஉம் தோற்றம் போல இருகுடை பின்பட ஓங்கிய ஒருகுடை உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க.

- புறம். 3.1/14

1.4.4.2. நீதிக் கருத்துக்கள் அரசியல் பற்றியவை என்றும், தனிமனிதனின் அறம் பற்றியவை என்றும் வகுத்துக் கொன்னத் தக்க வசையில் அமைந்துள்ளன. அரசியல் நீதிகள் ஒருசில பின்வருமாறு.

1.4.4.2.1. செய்ந்நன்றி மறவாமை அரசர்க்கு உரிய சிறந்த நீதியாகப் போற்றப்பட்டது. தான் தாழ்வு உற்றபோது தனக்கு ஒருவர் செய்த உதவியினை அரசு கட்டில் ஏறிய பின்னர் மறந்து விடும் மன்னன் நன்றி மறந்தவன் என்ற கருத்து வற்புறுத்தப்படுகின்றது.

கெட்ட இடத்து உவந்த உதவிக் கட்டில் வீறுபெற்று மறந்த மன்னன் போல நன்றி மறந்து அமையாய் ஆயின்.

-குறு. 225/35

1.4.4.2.2. நல்லாட்சி அமையாத நாடு கலக்க முறுதல் துன்பத்தைத் தருவதாகும் என்ற கருத்து வற்புறுத்தப்படுகிறது.

ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோறு பாழ்பட்டமுகத்தோடு பைதல்கொண்டு அடைவாளோ

- கலி. 5|1213

இதே கருத்து மற்றும் ஒருசில இடங்களில் கூறப்படுகின்றது.'

1.4.4.3. அரசியல் நீதிகள் அல்லாமல் தனி மனிதனின் வாழ்விற்குரிய நிதிகள் ஒருசில கூறப்படுகின்றன.

1. கலி. 10/57; 34/65; 118/18 2. கலி. 10/3; 27/12; 34; 18; 98/1416, 38/20, 47/56; 120/16; 138|16;

149/3; குறு 120/12.