பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சங்க இலககியதத்தில் உவமைகள்

நீர்மிகின் சிறையும் இல்லை தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை வளிமிகின் வலியும் இல்லை ஒளிமிக்கு அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி. புறம். 51/1-4

ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும் திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும் வானத் தன்ன வண்மையும் மூன்றும். -புறம்-55/13-15

12.3.4 இமயமும் பொதிகையும் இவ்வாறு இணைப் படுத்திக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூத்தி விளக்கில் துஞ்சும் பொற்கோட்டியமமும் பொதியமும் போன்றே. -

-புறம். 2/24-25

12.3.5 மணியும் பொன்னுமே அன்றி ஏனைய உலோகங்களும் இணைத்துக் கூறப்பட்டன. நீலமும் வெள்ளியும், பவழமும் மணியும், பவழமும் பொன்னும் ஏனைய உலோகங்களும் இணைத்துக் கூறப்பட்டன.

நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும் வெள்ளி அன்ன ஒள்வி உதிர்ந்து. -பதிற். 6/279-80

நீலத் தன்ன பாசிலை அகந்தொறும் வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண். நற். 249/2-3

காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு மணிமிடைத் தன்ன குன்றம் -அகம். 14/2-4

மணிமிடை பவளம் போல அணிமிகக் காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயன் மூதாய் ஈர்ப்புறம் வரிப்ப. -அகம். 304/13-15

மணிமண்டு பவழம் போலக் காயா அணிமிகு செம்மல் ஒளிப்பன மறைய

-அகம். 37.4/13-14

இனச்சிதர் உகுத்த இலவத்து ஆங்கண் சினைப்பூங் கோங்கம் தண்தாது பகர்நர் பவளச் செப்பில் பொன்சொரிந்த்ன்ன.

-அகம். 25/9-11