பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சங்க இலக்கியத்தில் உவமைகள்

பொருளையும் கூறி இவற்றுள் எது பொருள் எது உவமை என்று கூறாமல் விடுவதும் என இரண்டு வகை அமைப்பு களைச் சங்க இலக்கியத்தில் காண முடிகிறது. இவற்றை ஐய உவமை எனக் கூறலாம்.

முதல்வகை ஐந்குறுநூற்றுப் பாடல் ஒன்று எது உவமை எது பொருள் என்று ஐயுறும் நிலையில் ஓர் வினாவை எழுப்பு கிறது. தலைவனின் குணத்தினை வண்டு ஏற்றுக் கொண்டதா வண்டின் குணத்தைத் தலைவன் ஏற்றுக் கொண்டானா என்ற ஐயத்தை எழுப்புகிறது.

மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன கொல் வண்டின் மாண்குணம் மகிழ்நன் கொண்டனன்கொல்

- ஐங். 90/1/2

அகநானூற்றில் கீழ்வரும் ஐய உவமை காணப்படுகிறது. இதில் பொருளுக்கும் உவமைக்கும் ஐயம் உண்டாக்கப் படுகிறது. "கற்பு சான்ற தலைவியும் உருவால் அவள் பெண் என்று சொல்வதற்கில்லை; அவள் ஆய்நாட்டு மலைச்சாரலில் உறையும் தெய்வமகளோ என்று என் நெஞ்சு கருதுகிறது” என்று தலைமகன் கூறுகின்றான்.

ஆன்ற கற்பின் சான்ற பெரிய அம்மா அரிவையோ அல்லள் ஆஅய் நன்னாட்டு அணங்குடைச் சிலம்பில் கவிரம் பெரிய உருகெழு கவாஅன் நேர்மலர் சுனை உறையும் சூர்மகள் மாதோ என்னும் என் நெஞ்சு.

- அகம். 198/12-7

இரண்டாம் வகை : கலித்தொகையில் வரும் பாடல் ஒன்றில் தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுகின்றான். "இங்கே வருபவள் இவள் யாரோ தெரியவில்லை; வல்லவன் அமைத்த பாவையோ அழகிய மகளிரின் நலம் எல்லாம் திரண்டு அமைத்த உருவமோ! வெறுப்பினால் கூற்றுவன் அமைத்துத் தந்த வடிவமோ என்று மூன்று உவமைகளை அடுக்கிக் கூறி ஐய வினாக்களை எழுப்புகின்றான். உவமைகளுள் ஐயம் எழுப்பிய நிலை இதில் காணப்படுகிறது.