பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ο சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் ஒடியா இன்பத் தவருறை நாட்டுக் குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் வரியும் குரவையும் விரவிய கொள்கையின் புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு பொங்கிவரும் பரப்பில் கடல்பிறக் கோட்டிக் கங்கைப் பேர்யாற் றுக்கரை போகிய செங்குட் டுவனோடு ஒருபரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக் காண்டமுற் றிற்று” என்பது காப்பியத்தின் கவிதை அடிகளாகும்.

தமிழ் கூறும் நல்லுலகத்தில் மூன்று பெரு நிலமன்னர்கள் நல்லாட்சி நடத்தியதும், இந்தப் பெரு நிலங்களின் வளம், உற்பத்திப் பெருக்கம், உணவுப்பொருள் உற்பத்தியின் பெருக்கம், செல்வச் செழிப்பு, மக்களின் பெருமுயற்சிகளும் நல்வாழ்வும், ஆடல் பாடல், கலை இலக்கியம் கூத்து திருவிழாக்கள் முதலியனவற்றால் மக்களுடைய மகிழ்ச்சி, காவலர் (மன்னர்)களின் நீதியான ஆட்சி நிர்வாகம், நாட்டின் பாதுகாப்பு, படைபலம், அறவழியில் நின்ற ஆட்சிமுறை, வீரம், நாட்டின் தற்காப்பு முதலிய பலதுறை வளர்ச்சி நிலைமைகளை, மக்களின் வாழ்க்கை மேம்பாடுகளைப் பற்றிச் சிலப்பதிகாரப் பேரிலக்கியத்தின் மூலம் நாம் நன்கு அறிய முடிகிறது. ஆழ்வார்களின் பாசுரங்களில் பெரியாழ்வார்

" நாடும் நகரமும் நன்கறிய

நமோ நாராயணா வென்று பாடும் மனமுடைப் பத்தர்” என்று பெரியாழ்வார் நாட்டையும் நகரத்தையும் குறிப்பிட்டுப் பாடுகிறார்.

தனி மனிதனின் செழுமையான வாழ்க்கை அமைப்பைக் குறித்து, "நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும், அத்தாணிச் சேவகமும் கையடைக் காயும், கழுத்துக்குப் பூனும், காதுக்குக் குண்டலமும் மெய்யிட நல்லதோர்