பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 71

சாந்தமும் தந்தென்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல" என்று, நெய்யும் பாலும் சேர்ந்த நல்ல உணவு, உடை, ஆடை ஆபனங்கள், வேலை, கூலி, வருவாய் முதலியன ஒவ்வொரு வருக்கும் கிடைக்கப் பட்டர்பிரான் பல்லாண்டு பாடுகிறார். திருக்கோட்டியூரைப்பற்றி வண்ணமாடங்கள் கமுதிருக்கோட்டியூர் என்று குறிப்பிடுகிறார். முத்துமணி, வயியம், நன்பொன், வெள்ளித்தளை, பவளம் ஆகியவற்றின் சிறப்புகளைப்பற்றியெல்லாம் குறிப்பிடுகிறார்.

மாணிக்கங்கட்டி, வயிரம் இடைகட்டி ஆணிப் பென்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில், சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் அங்கைச் சரிவளையும் | ஜூறம் அரைத்தொடரும் அழகிய ஐம்படையும், ஆரமும், ஒதக்க லின் ஒளிமுத்தின் ஆரமும், சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும் என்றெல்லாம் அக்கால அணிகலன்களைப் பற்றியெல்லாம் விவரித்துக் கூறுகிறார்.

வைத்த நெய்யும், காய்ந்த பாலும், வடிதயிரும், நறு வெண்ணெயும் என்றும் அப்பம் கலந்த சிற்றுண்டி, அக்காரம் யில் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன் என்றும், கறந்த நற்பாலும், தயிரும் கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய் என்றும்,

"பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல்வளையாள் வன்மகள் இருப்ப” என்றும், "செந்நெல்லரிசி சிறுபருப்புச் .ெ ப்த அக்காரம் நறுநெய் பாலால் பன்னிரண்டு திருவோணம் அட்டேன்” என்றும், "கன்னல் இலட்டுவத் தோடு சீடை, கார் எள்ளின் உண்டை கலத்தில் இட்டு” என்றும், "அட்டுக்குவி சோற்றுப்பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறும் அடங்கப் பொட்டத்துற்றி” என்றும் மணம் நிறைந்த உணவுச் சிறப்புகளைப்பற்றி நாக்கில் எச்சிலுறப் படுகிறார்.

"காறை பூணும், கண்ணாடி காணும் தன்கையில் வளை குலுக்கும், கூறையுடுக்கும், அயர்க்கும் தன் கொவ்வைச் .ெ விவாய் திருத்தும்” என்று தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்த ஆயர் குலப்பெண்ணைப்பற்றிக்

கிெறார்.