பக்கம்:சுமைதாங்கி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைநகரின் வெளிப்புறத்தில் காவற் காடு,

சார்ந்ததனைச் சுற்றிலுமோர் அகழி வேண்டும்;

மலையெனவே ஓங்கியவான் மதிலும், செம்பில்

வடித்ததெனும் வடிவழகோ என்னத் தோன்றும்;

அலைந்துவரும் பகையழிக்க ஞாயில் என்னும்

அறைகளுடன் அம்புவிடும் புழையும் வேண்டும்;

கலையாமல் பெற்றிருந்தேன் ஒருகாலத்தில்,

கலைந்ததின்று; காணுகின்றேன் இலக்கி யத்தில்.

முடிவேந்தர் அரண்மனையை முன்னே நாளில்

முகிழ்வித்தார் மலைக்கோட்டை'யாகப் பாரி

கெடிதாண்டான் பறம்பு தனில், பேகன் வாழ்ந்தான் நிழல்சாய்ந்த பொதினி தனில், கள்ளி நின்ருன்

குடியோம்பித் தோட்டிமலை மேலே, ஓரி

கொல்லி'யிலும், குதிரைமலை அதிய மானும்,

மடியேந்தி வழங்காத காரிமுள்ளுர்’

மலையிலும், ஆய் பொதிகை"யிலும் கோட்டை கண்டார்

கட்டபொம்மன் கோட்டைநீங்கித் துரக்கில் தொங்கக்

காரணமாய் இருந்தவருள் அந்நாள் என்னைக்

கட்டியாண்ட அரசனுமோர் அங்கம் என்பார்;

கறைபடிந்த விளைவோகான் காய்ந்து போனேன்?

மட்டமான் பேர்வாங்கிக் கட்டிக் கொண்டேன்;

மனங்கசிந்த தமிழரசும் கருணை கூர்ந்து பொட்டலான புதுக்கோட்டை தனிமா வட்டம்

புதுமையுடன் பொலிக!' எனப் போற்றக் கண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/89&oldid=692166" இலிருந்து மீள்விக்கப்பட்டது