பக்கம்:செவ்வானம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 செவ்வானம் கொண்டிருக்கிற வேளையிலும், சிறுகச் சிறுகச் சேர்த்த நூல்கள் அவனுக்கு நல்ல தோழர்களாய், வாழ்க்கைக் கானலை மறக்க வைக்கும் துணைவர்களாய் விளங்கின. அவை அழிந்து பட்டதனால் அவன் வாழ்க்கையே பாழாய்ப்போனதுபோன்ற உணர்வைத்தந்தன. தன் வாழ்விலே வெறுமை கவிந்துவிட்டது. தனது காலம் முழுவதும் வியர்த்தமாகி விட்டது என்ற எண்ணம் வளர்ந்தது. கூடவே வளர்ந்த வேதனைச் கமை உறுத்தவும் அவன் கண்கள் சுடுநீர்சிந்தின. தாமோதரன் அழுதான். தரையிலே, சிதறிக் கிடந்த தாள்களினூடே, கிடந்து கண்ணிர் வடித்தான். அவன் மனத்துயரம் கரைந்துபோகிறவரை அழுதான். பிறகு அவன் உள்ளத்தில் அமைதி பூத்தது. இதை மகத்தான நஷ்டம் என்று கருதி இதயம் சாம்பிக் குவிவானேன்? திடீரென்று நானே செத்துவிட்டால்? அன்று கடும் வியாதியில் விழுந்து கிடந்தவன் புத்துயிர் பெறமுடியாது இறந்திருந்தால்? வாழ்க்கை நிலையே இத்தகையதுதான். இன்று புதிதாகப் பிறந்தேன் என்று சொல்வோம் இனி வாழ்விலே மறுமலர்ச்சி பெறவேண்டும் என முனங்கியது அவன் மனம், நான் சரியான பாதையில் போகவில்லை. எல்லோரும் சரியாக வாழவில்லை என்று குறை கூறிக் கொண்டிருந்தேன். எண்ணியதும், எழுதியதும். பேசியதும்போதாது. இதனால் மாத்திரமே நான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தாயிற்று என நினைத்துவிட்டேன் மக்களிடமிருந்து நான் விலகியே வாழ்ந்தேன். அவர்களிடம் எனக்கு வெறுப்பு வளர்ந்தது. மண்னோடு மண்ணாக வாழும் மக்கள் மனிதராக வேண்டுமென்றால், சிந்திக்கத் தெரிந்தவர்கள் அவர்களை வெறுத்து ஒதுக்கிவிட்டுத்தாங்கள் ஒதுங்கி வாழ்வதிலே பயனில்லை. மனித இனத்தில் நம்பிக்கை வைக்காவிட்டால் எதிர்காலத்திலும் இருள்தான் நிறைந்திருக்கும் என்று பேசியது அவன் சிந்தனை. 'ஆனால் மனிதவர்க்கம் வளர்ச்சியுறுவதற்கு இன்னும் எவ்வளவோ காலம் போகவேண்டும் என்று தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/154&oldid=841366" இலிருந்து மீள்விக்கப்பட்டது