பக்கம்:செவ்வானம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 செவ்வானம் 'ஊம் வாழ்க்கைச் சந்தையிலே இந்த முகாம் மாற்றிவேறு இடத்தில் கூடாரமடிக்க வசதி கிடைக்குமா என்று பார்க்கப் போகிறேன்' என்றாள் குமுதம், நீங்கள்கூட எங்கோ கிளம்பி விட்டதாகத்தான் தெரிகிறது. கொஞ்ச நேரம் பிந்திவந்திருந்தால் உங்களைச் சந்தித்திருக்கவே முடியாது போலிருக்கு என்றாள். நேற்று உன்னைக் காண வேண்டும் என்று விரும்பினேன். விலாசம் தெரியாது இது திடீரென்று செய்த முடிவு. ஒரு மணி நேரம்கூட இராது நான் இப்படித் தீர்மானித்து. இந்த ஊரில் நடைபெறுபவை உனக்குத் தெரியாமலிராது. ராத்திரி என்னை உதைக்கவோ, ஏனோ, இங்கு வந்தவர்கள் எனது புத்தகங்களைப் பாழ்படுத்தி விட்டுப் போய்விட்டார்கள். நான் ரகுராமன் அறையில் தங்கியிருந்தது நல்லதாயிற்று' என்றான். குமுதம் அவசரப்படுத்தினாள். அப்படியானால் மறுபடியும் அவர்கள் தேடிவந்தாலும் வரலாம்; நாம் இங்கு நிற்பதே தவறு. வாருங்கள் உங்களிடம் சில முக்கிய விஷயங்கள் சொல்லவேண்டும். பேசிக்கொண்டே போகலாம் என்று நகர்ந்தாள். அவனும் தொடர்ந்தான். சிவசைலம் வந்து சந்தித்த விவரத்தைக் குமுதம் சொன்னாள் 'சிவசைலம்தான் இதற்கெல்லாம் காரணம். அவர் திட்டமிட்டு நடத்திவைத்தவை தான் இவைகள் முதலாளி புன்னைவனம் அவருக்கு உதவி செய்திருப்பார் என்றாள் 'நானும் அப்படித்தான் நினைத்தேன்' என்று சொன்னான் தாமோதரன். அதிகாலையில் புஷ்பித்துப் புது வனப்புடனும் மணத்துடனும் திகழும் மலர்போன்ற குமுதத்தின் பெயரில் தன்னால் மாசுபடிந்துவிட்டதே என்ற வருத்தம் அவன் உள்ளத்தில் குடியிருந்தது. அதே நினைவால் அவன் மெளனமாக நடந்தான். அவளும் பேசாமல் நடந்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/156&oldid=841368" இலிருந்து மீள்விக்கப்பட்டது