பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


புறத்தேயும், சுரங்களிலும், காடுகளிலும் பலரும் போக்கு வரவு புரியும் சிறுவழிகளிலும், பெருவழிகளிலும் வழிச் செல்வார்க்கு நிழல் தரும் நிலையில் நெடுங்கல்லாக நடப்பெற்றன என்பது,

"விழுத் தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர் அழுத்துடை நடுகல்” (ஐங். 352)

எனவும்,

"பலர்க்கு நிழலாகியுலகமீக் கூறுத்

தலைப்போகன்மையிற் சிறுவழி மடங்கி நிலைபெறு நடுகல்லாகிய கண்ணும்’ (புறம். 228)

எனவும்,

“எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும்

அருஞ்சுரக் கவலை” (அகம். 53)

எனவும்,

“நடுகற் பிறங்கிய உவலிடு பறந்தலை’ (புறம், 314)

எனவும்,

பெயரும் பீடும் எழுதியதர் தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேலு ன்றுபலகை வேற்றுமுனை கடுக்கும் வெருவரு தகுந கானம்” (அகம். 131)

எனவும் வரும் சங்கச் செய்யுட் பகுதிகளால் இனிது விளங்கும்.

வீரர்களின் பெயரும் பெருமையும் பொறித்துத் தெய்வமாக நடப்பட்ட நடுகல்லின் பெருமையுணராத ஆறலைகள்வர் தம்முடைய அம்புகளை அந்நடுகல்லின் மேல் வைத்துத் திட்டுவதால் அக்கல்லும் தேய்ந்து அதன்கண் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் தேய்ந்தொழிதல் உண்டு. அந்நிலையின் வழிச் செல்வோர் நடுகல்லிற் பொறிக்கப் பெற்ற எழுத்துக்களைப் படித்து நடுகல்லாகிய வீரனது