பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வாய்மொழிப் புலவன் எனவும் சங்க இலக்கியங்களில் போற்றப் பெறுகின்றார். திருமாலின் அவதாரமாகிய இராமபிரான் தன் தேவியை வவ்விய தூர்த்தனாகிய இராவணனைக் கொல்லுதற் பொருட்டுக் கோடிக்கரையி லுள்ள ஆலமரத்தினடியில் தன் நண்பர்களுடன் அமர்ந்து போரில் வெற்றி பெறும் திறத்தினைச் சூழ்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அந்நிலையில் அம்மரத்தில் உள்ள பறவைகளின் ஆர்ப்பொலிகள் மிக்கன. அதுகண்ட இராமபிரான் தம் கையினை அமர்த்திப் பறவைகளின் ஆரவாரம் உடனே யடங்கும்படி செய்தார். இராமாயணம் பற்றிய இச்செய்தி தமிழக மக்களாற் பேசப்பட்டு வருகிறது. இது

“வென் வேற் கவுரியர் தொன்முது கோடி

முழங்கிடும் பெளவ மிரங்கு முன்றுறை

வெல்போரிராமன் அருமறைக் கவிந்த

பல்வீ ழாலம் போல

ஒலியவிந்தன்றிவ் வழுங்க லூரே” (அகம். 70)

என வரும் அகநானூற்றுப் பாடற் றொடரில் இடம் பெற்றுள்ளமை காணலாம்.

திருமால் அமிசமாகிப் பிறந்த பரசுராமன் மன்னர் மரபின ைவேரறக் கொன்று செல்லூர்’ எனும் ஊரிலே களவேள்வி செய்தான் என்ற செய்தி,

"கெடாஅத் தீயின் உருகெழு செல்லுர்க் கடாஅ யானைக் குழுஉச்சமந்ததைய மன் மறுங் கறுத்த மழுவாள் நெடியோன் முன் முயன் றரிதினின் முடித்த வேள்விக் கயிறரை யாத்த காண்டகு வனப்பின் அருங்கடி நெடுந்துண் போல’ (அகம். 220)

என்ற தொடரால் அறியப்படும்.

சிவபெருமானும், திருமாலும் சங்கரநாராயணர் என ஒருவராகத் திகழும் தோற்றம், அந்திவானும், கடலும் சேர்ந்த