பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

207


“நின், வெம்மையும் விளக்கமு ஞாயிற்றுள

நின், தண்மையும் சாயலும் திங்களுள நின், சுரத்தலும் வண்மையு மாரியுள நின், புரத்தலு நோன்மையு ஞாலத்துள நின், நாற்றமு மொண்மையும் பூவையுள நின், தோற்றமு மகலமு நீரினுள நின் உருவமு மொலியுமா காயத்துள நின், வருதலு மொடுக்கமு மருத்தினுள அதனால், இவ்வு முவ்வு மவ்வும் பிறவும் ஏம மார்ந்த நிற்பிரிந்து மேவல் சான்றன. வெல்லாம்” (பரி. 4, 25-35)

என வரும் பரிபாடல் பகுதியாகும். உலகுயிர்களின் தோற்றமும் நிலைபேறும் ஒடுக்கமும் திருமாலாகிய முதல்வன்கண்ணே அமைந்தன என்பது மேற்காட்டிய தொடரின் கருத்தாகும்.

அறவாழி அந்தணனாகிய இறைவனது திருவருளை அம்முதல்வனுடைய திருவடியாக உபசரித்துக் கூறுதல் பழந்தமிழ் மரபு. இம்மரபு,

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்த லரிது’ (குறள். 8)

எனவும்,

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்” (குறள். 3)

எனவும் வரும் தமிழ் மறையால் புலனாகும். உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் கரையேற்றும் புனையாகவும், பேரின்பமாகிய வீடு பேற்றிற்கு நிலைக்களமாகவும் விளங்குவது இறைவன் திருவருளாகிய திருவடியே யென்பது திருவள்ளுவர் துணிபு. எனவே இறைவன் திருவடியே வீடு பேறாய் இருக்கும் என்பது தமிழ் மக்களது கோட்பாடாதல் புலனாம். இக்கொள்கை,

“நின்னிற் சிறந்த நின்தா வினையவை (பரி. 4, 62)