பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

227


நிகழ்த்தும் இவ்வெறியாடலில் மனங்கமழ் தெய்வமாகிய செவ்வேள் தன்னை வழிபடும் வேலன் மேல் விரவித் தோன்றி (ஆவேசித்து) வேலனது வாய்மொழி வழியாக முன்நிகழ்ந்த தனையும், பின்னர் நிகழ இருப்பதனையும் அறிவுறுத்தி அருள்வான் என்பது மலைவாழ்நர் வாழ்வியலிற் காணப்படும் நம்பிக்கையாகும்.

ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் மேற்கொண்டொழுகும் களவொழுக்கத்துள்ளே தலைமகள் தன் ஆருயிர்த் தலைவனை அடையப் பெறாது தனிமையுற்று வருந்திய நிலையில் அவளது வாட்டத்திற்குரிய காரணம் அறியப்பெறாது வருந்திய செவிலி இவளுக்கு நேர்ந்துள்ள வாட்டம் எதனால் ஆயிற்று என ஐயுற்றுத் தலைமகளது வாட்டத்தைத் தனித்தற்பொருட்டு முன் நிகழ்ந்ததனையும், பின் நிகழ்வதனையும் கட்டினாலும் கழங்கினாலும் எண்ணி அறிவாரை அழைத்துக் கேட்ட பொழுது, அவர்கள் தெய்வத்தால் வந்த வருத்தம் என்று கூறினமையால், முருகபூசனை பண்ணும் வேலனை அழைத்துத் தம்மனைக்கண் வெறியாடல் நிகழ்த்துதலும், அதன்பயனாக முருகப் பெருமான் அருளால் தலைமகள் நோய் தனியப்பெறும் என நம்புதலும் இயல்பு. கட்டினால் எண்ணி அறிபவள் கட்டுவிச்சி. கட்டு என்பது சிறு முறத்தில் பரப்பிய நெல்லைக் கொண்டு முன் நிகழ்ந்ததனையும், இனி நிகழ்வதனையும் எண்ணிப் பார்த்துச் சொல்லும் ஒருவகைக் குறி. இக்குறி பார்ப்பவர் கட்டுவித்தி என அழைக்கப்படுவாள்.

“கட்டுவிச்சி கட்டேறி

சீரார் சுளகிற் சிலநெல் பிடித்தெறியா வேரா விதிர்விதிரா மெய்சிலிராக் கைமோவாப்

பேரா யிரமுடையான் என்றாள்'

எனவரும் சிறிய திருமடலும், திருக்கோவையார் 285ஆம் பாடல் உரையும் கட்டுப்பார்த்தலின் இயல்பைப் புலப்படுத்தும். கழங்கு கழற்சிக்காய், கழங்கினை எண்ணிக் குறி சொல்பவன் வேலன். தன் நோய் தணிவித்தல் காரணமாகத் தன் மனைக்கண் வெறியாட்டு நிகழ