பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


$4. - - t לל அவனருளாலே அன்தாள் வணங்கி

எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழியும் மேற்குறித்த பரிபாடற்றொடரின் விளக்கமாக அமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கி உணரற்பாலதாகும்.

முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவரும் போற்றும் முழுமுதற் கடவுளாகப் பரங்குன்றத் தெழுந்தருளிய செவ்வேளைப் பரவிப் போற்றுவது எட்டாம்பரிபாடலாகும். மலர்ந்த துழாய் மாலையையும் அளவ, ) செல்வத்தினையு முடைய கருடக் கொடியோனாகிய திருமாலும் ஏறுார்ந்த செல்வனாகிய சிவபெருமானும் தாமரை மலரில் வீற்றிருப்போனாகிய நான்முகனும் அவனிடத்தே தோன்றி உலகத் திருளை நீக்கிய சூரியர் பன்னிருவரும் அசுவினிதேவர் என்னும் மருத்துவர் இருவரும், வசுக்கள் எண்மரும் ஆதிரை முதல்வனாகிய இறைவன் பெயராற் சொல்லப்பட்ட உருத்திரர் பதினொருவரும் ஆகத் தேவர் முப்பத்து மூவரும் நல்ல திசைகளைக் காப்போராகிய இந்திரன் முதலிய எண்மரும் இவர் எல்லோரும் இவரொழிந்த பிறரும் ஆகிய தேவர்களும் அவுனர்களும், அறிதற்கரிய வேதத்தினை அறிந்த தவச் செல்வராகிய தெய்வ முனிவர்களும், முழு முதற் பொருளாகிய முருகனைக் காணுதல் காரணமாக நிலமிசை வந்து தங்கும் இடமாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். ஆகவே திருப்பரங்குன்று தேவர்கள் தங்கும் பழைய இடமாகிய இமயக் குன்றத்தை ஒக்கும். அவ்விமயக் குன்றின் கண்ணே விளங்கும் சிறப்புடையதாய் முருகனை ஈன்ற தாமரை பூத்த வற்றாப் பொய்கையினை ஒத்தது. திருப்பரங்குன்றில் உள்ள அருவி தங்கும் சுனையாகும் என ஆசிரியர் நல்லந்துவனார் முருகப் பெருமான் எழுந்தருளிய திருப்பரங்குன்றத்தினை இமயக் குன்றத்தினொடும் இணைத்துப் போற்றுவதாக வமைந்தது,

$%

மண்மிசையவிழ் துழாய் மலர்தரு செல்வத்துப் புண்மிசைக் கொடிே யானும் புங்கவ மூர்வோனும் மலர்மிசை முதல்வனும் மற்றவனிடைத் தோன்றி உலகிரு ளகற்றிய பதின்மரு மிருவரும்