பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

25


நிகழ்த்தும் வேத வேள்விகளைக் கண்டித்துரைப்பாராயினர். இவ்வாறு வடநாட்டிலும் தென்னாட்டிலும் வேத வேள்விகட்குக் கடுமையான எதிர்ப்புத் தோன்றுதலைக் கண்ட ஆரியர்கள் வேதநெறிப்படி வேள்விகளைச் செய்யும் வைதிக நெறியே தமக்குரியது எனக் கொண்ட தமது கோட்பாட்டினைச் சிறிது மாற்றிக் கொண்டு உலகுயிர்களை உள் நின்றியக்கும் முழுமுதற் பொருள் ஒன்று உண்டு என இந்நாட்டு முன்னோர் வலியுறுத்திய தெய்வங் கொள்கையினையும் உடன்பட்டு ஏற்றுக் கொண்டனர் எனத் தெரிகிறது.

வேதம் அநாதி எனவும் அதன் கண் விதிக்கப்பட்ட வேள்விச் சடங்குகளே இம்மை மறுமையின்பங்களைத் தரவல்லன எனவும் கூறிவந்த வைதிக சமயத்தார் புத்த சமன மதங்களால் வேதவேள்விச் சடங்குகள் கடுமையாக மறுக்கப்பட்ட நிலையில் வேள்வியிற் பசுக்கொலையைப் பெரிதுந் தவிர்க்க முயன்றனர்; வேதங்கள் சிவபெருமானால் அருளிச் செய்யப்பெற்றனவே எனவும் சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு ஊன்பயிலாத தூய வேள்வி செய்தலே எல்லா நலங்களையும் தரும் எனவும் சிவனை முழுமுதற் பொருளாகக் கொண்டு செய்யப்படும் வேள்வி நெய்யினால் வேட்கப்பெறும் ஊன் பயிலாவேள்வியாய் அமைதல் நன்றெனவும் கொண்டனர். தம் கொள்கைகளை யெதிர்த்த புத்தர் சமணர்களைத் தருக்கநூல் முறையில் வென்று தமிழகத்தில் நிலவிய தெய்வங்கொள்கையாகிய சிவநெறியின் சார்பினைப் பெற்றுத் தமது வைதிக நெறியினையும் தமிழகத்தில் நிலைபெறச் செய்து கொண்டார்கள். இச்செய்தி,

"நன்றாய்ந்த நீணிமிர்சடை

முதுமுதல்வன் வாய் போகாது

ஒன்று புரிந்த ஈரிரண்டின்

ஆறுணர்ந்து ஒரு முதுநூல்

இகல்கண்டோர் மிகல் சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளி'இ