பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு



மூவேழ்துறையு முட்டின்றுபோகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக

நிலைக்கொத்த நின் துணைத் துணைவியர்

நீர் நாண நெய்வழங்கியும்

எண்ணாணப் பலவேட்டும்

மண்ணாணப் புகழ்பரப்பியும்

அருங்கடிப் பெருங்காலை

விருந்துற்ற நின் திருந்தேந்துநிலை

என்றுங் காண்கதில் யாமே”

எனச் சோனாட்டுப் பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயனை ஆவூர்மூலங்கிழார் பர்டிய புறநானூற்றுப் பாடலால் இனிது புலனாகும். இவ்வாறு வேதநெறியும் மிகுசைவத்துறையும் இணைந்து வளம்பெறவும் வைதிக சைவநெறியினைப் பழித்துரைக்கும் புத்தம்சமனம் முதலிய புறச்சமயங்கள் தலைமடங்கவும் தனது கல்வித் திறத்தாலும், தூய வேள்வியாலும் இறை வழிபாட்டினாலும் கடைச்சங்ககாலத்திற் புகழ் பரப்பி வாழ்ந்த அருமறையந்தனன் கவுனியர் கோத்திரத்திற் பிறந்த விண்னந்தாயன் என்பதனை மேலே காட்டிய புறப்பாடலில் ஆவூர் மூலங்கிழார் தெளிவாக விளக்கியுள்ளமை காணலாம். இவ்வாறு தமிழகத்திலே பண்டைக் காலத்திலேயே வைதிக சைவ நெறியினை மேற்கொண்டு வாழ்ந்த அந்தனன் விண்ணந்தாயன் பிறந்தகெளனிய கோத்திரத்தில் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கக் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் காழிப்பதியில் தோன்றிய அருளாசிரியர் திருஞானசம்பந்தப் பிள்ளையார் என்பது இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும்.

இந்திய நாட்டில் முதன்முதற் குடியேறிய பழைய ஆரியர்கள் ஆடு முதலிய விலங்கினங்களைக் கொன்று ஊனுங் கள்ளும் படைத்துச் செய்த வேள்விகட்கும் புத்தசமண மதங்கள் தோன்றிக் கொலை வேள்விகளைக் கண்டித்த நிலையில் இடைக்காலத்தில் வாழ்ந்த நான்மறை

31. புறநானூறு 166.