பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இறைவனடியையே நினைப்பார்க்குப் பிறிவியாதலும், இறைவனடியை நினையாது உலகியல்பையே நினைவார்க்குப் பிறவி ஆறாமையும் இக்குறளால் நியமிக்கப்பட்டன.

காணப்படும் இவ்வுலகம் ஆதிபகவனை முதலாக வுடையது எனவே உலகியற்கு முதல்வன் இறைவன் ஒருவனே என்பது பெறப்படும். அம்முதல்வன் தூய மெய்யுணர்வே தன் திருமேனியாகவுடையவன் எனவே அவன் இயல்பாகவே பா சங்களின் நீங்கிய இயற்கை யுணர்வினன் என்பதும் பெறப்படும். உயிர்களின் நெஞ்சத் தாமரையில் எழுந்தருளியவன் இறைவன் எனவே அம்முதல்வன் உயிர்களோடு பிரிவின்றிக் கலந்துள்ளான் என்பதும் கூறினாராயிற்று. வேண்டுதல் வேண்டாமை யிலான் இறைவன் எனவே குறைவிலா நிறைவாகிய அவனுக்குப் பகையும் நட்பும் இல்லையென்பது பெறப்படும். உலகு உயிர்கள் ஆகிய எல்லாப்பொருள்களிலும் நீக்கமறத் தங்கியிருத்தல் கடவுளிலக்கனமாதலின் இறைவன் என்பது கடவுளுக்குரிய காரணப்பெயராயிற்று. இறுத்தல் என்னும் வினையடியாகப் பிறந்த பெயர் இறை என்பதாகும். இறை - பொருள்கள்தோறும் நீக்கமறத் தங்கியிருப்பது. இறைவ னுடைய பொருள் சேர் புகழ்த் திறங்களை இடை விடாது புகழ்ந்து போற்றுவார்க்கு இருள்சேர் இருவினையும் சேரா எனவே இருவினைத் தொடக்குடையவை உயிர்கள் என்பதும் அவ்விருவினைத் தொடக்கினின்றும் இயல்பாகவே நீங்கி விளங்கிய முற்றறிவினன் இறைவன் என்பதும் உய்த்துணர வைத்தாராயிற்று. பொறிவாயில் ஐந்தவித்தான் எனவே ஐம்புலன்களையும் அடக்கவல்ல அறிவாற்றலை உயிர்கட்கு வழங்கவல்லவன் உயிர்க்குயிராகிய இறைவனே என்பதும் அவனருள் வலியின் துணைகொண்டு ஐம்புல வுணர்வின் நீங்கி மெய்ப்பொருளை யுணர்ந்து உய்தி பெறுதற்குரிய நெறியே பொய்தீர் ஒழுக்க நெறியெனப் போற்றப்படும் என்பதும், அந்நெறியில் நிலைநின்றொழுகு வார் எக்காலத்தும் அழிவின்றி வாழ்தலாகிய பேரின்ப நிலையைப் பெறுவர் என்பதும் அறிவுறுத்தியவாறாகும். ஒப்பாரும் மிக்காரும் இன்றி எல்லாவுயிர்கட்கும் ஒப்பற்ற தலைவனாகத் திகழ்தலே இறையியல்பாதலின் கடவுளாகிய