பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


விளக்கப்பெற்றது. வேண்டுதல் வேண்டாமையின்றி நடுநிலையில் நின்று எல்லாவுயிர்களையும் அவற்றின் இருவினைப் பயன்களையருத்தி முறை செய்து காப்பாற்றும் இறைமைத் தன்மையாகிய முறைமை, மலர்தலையுலகுக்கு உயிரெனச் சிறந்த மன்னனிடத்தும் அமைந்திருத்தல் கொண்டு மன்னனையே கடவுளாக மதித்து இறைவன் என உயர்த்துப் போற்றுதலும் தமிழ்மரபாயிற்று. இறைவன் என்ற பெயர் கடவுள் ஒருவர்க்கேயுரிய காரணப்பெயரென்பதும் அப்பெயரால் மன்னனைக் குறித்தல் உபசார வழக்கென்பதும் ஆகிய இவ்வுண்மையினை,

袭警 * - 络 * 3. g 沙 t;

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்

கிறையென்று வைக்கப்படும்” (திருக். 388)

எனவரும் திருக்குறளில் திருவள்ளுவர் தெளிவாக விளக்கிய திறம் கூர்ந்துணரத் தகுவதாகும். தான் முறைசெய்து பிறர் நலியாமற் காத்தலையுஞ்செய்யும் அரசன் பிறப்பினால் மனிதனேய்ாயினும் செயலால் மனிதர்க்குக் கடவுள் என்று உயர்த்துப் போற்றப்படுவான்’ என்பது இத்திருக்குறளின் பொருளாகும். 'இறை என்னாது 'இறையென்று வைக்கப்படும்’ எனத்தெரிந்து மொழிதலால் இறை என்பது கடவுளுக்கேயுரிய பெயரென்பதும் மன்னனை இறையென உயர்த்துக் கூறுதல் உபசார வழக்கென்பதும் நன்கு தெளியப்படும்.

உயிரும் உடம்பும் தம்முள் கலப்பினால் ஒன்றாயும் பொருட்டன்மையால் வேறாயும் உள்ள இருவேறு பொருள்கள் என்பது ஆசிரியர் தொல்காப்பினார் காலத்துக்கு முற்பட்ட காலம் முதல் இன்றுவரை தமிழகத்தில் நிலைபெற்றுவரும் தத்துவக் கொள்கை யென்பது முன்னர் விளக்கப்பட்டது. உடம்பும் உயிரும் பொருட்டன்மையால் வேறாவன என்பது யாவரும் அறிந்ததே. உடம்பு உருவுடையது, நிலையின்றி அழியு மியல்பினது, அறிவில்லாதது, உயிரோ காணாமரபினதாய் அருவாயுள்ளது, என்றும் அழிவின்றி நிலைபெற்றுள்ளது, அறிவுடையது. அருவாய் அழிவில்லாததாய் அறிவுடையதாய் உள்ள உயிர்க்கும் உருவாய் அழிவுடையதாய்