பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

463


பிறப்பு எனவரும் திருக்குறள் தொடர்களை ஒப்புநோக்கி ஆராய்வார்க்கு இனிது விளங்கும்.

ஐயத்தினின்றும் நீங்கி மெய்ப்பொரு ளுண்மையை யுனர்ந்தார்க்கு அவர்கள் எய்தி நின்ற நிலவுலகத்தினும் இனி எய்து தற்குரிய வீட்டுலகம் மிகவும் அணிமைக்கண் நெருங்கியுள்ளது என்பார்.

“ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து” (திருக். 353)

என்றார் திருவள்ளுவர். ஐயமாவது ஒருபொருளைக் குறித்துப் பலவேறாக எண்ணி அவற்றுள் ஒன்றிலுந்துணிவு பிறவாது நிற்றல். ஒருவாற்றாற் பிறர் மதங்காைந்து தமது மதத்தினை நிலைநாட்ட முயலுதல் எல்லாச் சமய நூல்கட்கும் இயல்பாதலின் அந்நூல்கள் கூறுகின்றவற்றுள் யாது மெய் என நிகழும் ஐயத்தினை யோக முதிர்ச்சி யுடையார் தமது அனுபவத்தால் நீக்கி அதன் மெய்மையை யுனர் வராதலின் அத்தகைய மெய்ப்பொருள் பயிற்சி யுடையோரை 'ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்’ என்றார். மெய்ப்பொருளைத் தெளிந்தார்க்கு அவ்வனுபவவுணர்வு பயின்று மேற்படிப் பண்டையுலகியலுணர்வு துர்ந்து மறையுமாதலின் இவ்வுலகியல் தொடர்பினும் வீட்டியல் தொடர்பே அவர்க்கு மிக நெருக்கமுடையதாய் வரும் என்பார் வையத்தின் வானம் நனியதுடைத்து என்றார்.

மெய்ப்பொருளாகிய இறைவனையுணர்ந்து போற்றாதார்க்குப் புறத்தே செல்லுதற்குரிய புலன்களின் வேறுபாட்டால் ஐந்தாகியவுணர்வுடைய மனம் புலனடக்கத்தால் அவற்றை விட்டு நீங்கித் தம்வயத்ததாய வழியும் சிறிதும் பயனில்லையென்பது,

'ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர் வில்லாதவர்க்கு (திருக். 354)

எனவரும் திருக்குறளால் வலியுறுத்தப்பட்டது. ஐயுணர்வுஐந்தாகிய உணர்வு என்றது ஐம்புலவுணர்வுடைய மனத்தினை