பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என்றார் திருவள்ளுவர். இவ்வுலகத்து நுகர்பொருள் வாய்க்கப்பெறாத வறியோர்களும் குடும்பத் தொடர்பினை மேற்கொண்டு பண்டை நல்வினைப் பயனால் உண்டுடுத்து இனிது வாழக்காண்கின்றோமாதலின் இன்பதுன்ப நுகர்ச்சிக்கு நேரே காரணமாவது அவர்தம் முன்வினைப் பயனாகிய ஊழேயன்றிச் செல்வ வறுமைகள் காரணமல்ல என்பது இக்குறளால் வலியுறுத்தப்பட்டது.

மக்கள் தாம் முன்னர்ச் செய்த தீவினையும் நல்வினையும் காரணமாகவே நல்வினைப் பயனாகிய இன்ப நுகர்ச்சியும் தீவினைப் பயனாகிய துன்பநுகர்ச்சியும் ஊழால் ஊட்டப்படுகின்றன என்னும் உண்மையையுணரப் பெறுவீர்களாயின் 'தீதும் நன்றும் பிறர்தரவாரா என்னும் தெளிவுடையராய்த் தம்மையடைந்த இருவினைப் பயன்க ளாகிய இன்பதுன்பங்களை விருப்பு வெறுப்பின்றி ஒப்ப நுகரும் உணர்வுடையராதலே மெய்யுணர்வுடையார் இயல்பாதல் வேண்டும். ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமாதலின்றிப் புண்ணியபாவம் இரண்டிலும் அவற்றின் பயன்களிலும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து அவ்வினைத்தொடர்பினை விடுவோனது அறிவின்கண் அவ்விருவினையும் அவ்வாறு ஒப்பநிகழ்தலே இருவினை யொப்பு என்பார் சைவசித்தாந்திகள். மெய்த்திரு வந்துற்றாலும் வெந்துயர் வந்துற்றாலும் ஒத்திருக்கும் உள்ளத்துரனுடைமையாகிய இவ்விருவினையொப்பு மெய்யுணர்வுடையார்க்கு இன்றியமையாதது என வற்புறுத்துவது,

“நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

அல்லற் படுவதெவன்” (திருக். 379)

எனவரும் திருக்குறளாகும். தாம் செய்த நல்வினை முதிர்ந்து இன்பமாகிய பயனைத் தரும்பொழுது அதனை இனிது எனவிரும்பி நுகர்பவர்கள், தாம் செய்த தீவினை முதிர்ந்து துன்பமாகிய பயனைத்தரும்பொழுது அதனையும் அவ்வா توفي நுகர முற்படாது வெறுத்து அதனை அகற்ற முயன்று அல்லற்படுவது எற்றுக்கு? என்பது இதன் பொருளாகும்.