பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இன்பமிகும் செல்வம் பெரிதாகும் என்று இல்வாழ்வார்க்கு வேதத்துட் கூறப்பட்டதாயினும் துறவால் அமைந்தோர்க்கு ஒருயிரைக் கொல்லுதலால் வரும் செல்வம் இழிவாம் (திருக். 328) என்பதும் கொலைத்தொழிலையுடைய மாந்தர் அதன் புன்மையை அறியாராயினும் மெய்யுணர்ந்தார் நெஞ்சத்து அன்னோர் புலைத்தொழிலராகவே இழித் தொதுக்கப்படுவர் (திருக். 329) என்பதும் அருவருக்கும் உடம்பினராகவும் இழிதொழில் வாழ்க்கையினராகவும் இவ்வுலகில் வறுமை நிலையிற் காணப்படுவோர் முன்னைப் பிறப்பில் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கியவர் (திருக், 330) என்பதும் திருக்குறளிற் கொல்லாமை என்னும் அதிகாரத்தில் விரித்துரைக்கப்பட்டன.

உயிரின் அறிவு இருள்மலத்தின் சேர்க்கையால் மயக்கமும் வஞ்சனையும் உடையதாய்ப் பிறர்பொருளைக் களவிற்கவர்தல், பிறவுயிர்களைக் கொல்லுதல் முதலிய தீச்செயல்களுக்குக் காரணமாதல் பற்றிக் களவென்னுங் காரறிவு” என்றார் திருவள்ளுவர். இங்கு இருள் மலத்தின் காரியத்தினைக் காரணமாகவுபசரித்தார் ஆசிரியர். பிறர் பொருளைக் கவர என்னும் களவு பற்றிய கருத்தும் தனக்குரிய பொருள்களையெல்லாம் பற்றுக்களையும் துறவுபற்றிய எண்ணமும் இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறுபட்டன வாகும.

'தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ (திருக், 293)

GTলাGম্Lo,

'உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லா முளன்’ (திருக், 294)

எனவும் வரும் பாக்களில் நெஞ்சு, உள்ளம் என்பன இடவாகுபெயராய் உயிருணர்வையும் அவ்வுணர்வுக் குனர்வாய் எவ்வுயிர்க்குஞ் சான்றாயுள்ள முழு முதற் பொருளையும் குறித்து நின்றன. “எவ்வுயிர்க்குஞ் சான்றாம் ஒருவனை என்பது அப்பர் அருள்மொழி.